நிலக்கரிசுரங்க ஒதுக்கீடு முறைகேடு மற்றும் ரெயில்வேபணி நியமன ஊழல்தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலகவேண்டும் என பாஜக வற்ப்புறுத்தி வருகிறது.
பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலகவற்புறுத்தி அவரது வீட்டை முற்றுகையிட்டு இன்று போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பாஜக அறிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து டெல்லி ரேஸ்கோர்சில் உள்ள பிரதமர் அலுவலக இல்லம் மற்றும் அதனை சுற்றியுள்ளபகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அங்கு ஏராளமானபோலீசார் குவிக்கப்பட்டனர். கண்ணீர் புகைகுண்டும் தயார் நிலையில் வைக்கப்பட்டது.
பா.ஜ., இளைஞரணியை சேர்ந்த ஆயிரகணக்கானோர்கலந்து கொண்டனர்.போராட்டத்தில் ஈடுபட்டோரை முன்னேறாமல்தடுக்க போலீசார் தடுப்புகளை அமைத்திருந்தனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை . இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீசார் தண்ணீர்பீய்ச்சி யடித்தனர். தடியடியும் நடத்தப்பட்டது; இதனையடுத்து அப்பகுதியில் பா.ஜ,வினருக்கும் காவல்துறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |
Leave a Reply
You must be logged in to post a comment.