பாகிஸ்தானில் புதிய பிரதமராக நவாஸ் செரீப் 3-வது முறையாக பதவி ஏற்க உள்ளார்.இந்நிலையில் அவர் இந்திய பத்திரிகைக்கு ஒன்றுக்கு லாகூரில் இருந்தபடியே டெலிபோனில் பேட்டி அளித்தார்.அப்போது அவர்,"தற்போது பாகிஸ்தானில் பல பிரச்சினைகள் மற்றும் சவால்கள் உள்ளன. அதில் பொருளாதாரம் தான் மிக மோசமான சவாலாக உள்ளது.
எனவே, நாட்டை பொருளாதார வளர்ச்சிக்கு கொண்டு வருவதற்கு நான் முக்கியத்துவம் அளிப்பேன்.
பாகிஸ்தானில் ஜனநாயகம் வலுப்படுத்தப்பட வேண்டும். நான் ஏற்கனவே 2 தடவை பிரதமராக பதவி வகித்து இருக்கிறேன். ஆனால், எனது ஆட்சிக்காலம் முழுவதையும் நிறைவேற்ற அனுமதிக்கவில்லை தற்போது நான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். ஏனெனில் இந்த தடவை ஆட்சி காலம் முழுவதையும் முடிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது.
தற்போது பாகிஸ்தான் தீவிரவாதிகளின் கைகளில் சிக்கி தவிக்கிறது. தீவிரவாதம் பர்வேஸ் முஷரப் விருப்பத்தின் பேரில் உருவாக்கப்பட்டது. முஷரப்பின் அரசியல் கொள்கைகளால் தான் தீவிரவாதம் வெளிப்பட்டது. சர்வாதிகாரியான அவர் தான் பாகிஸ்தானில் மதவாதத்தையும், தீவிரவாதத்தையும் தோற்றுவித்தார். பாகிஸ்தான் மண்ணில் இருந்து இனி இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவ அனுமதிக்க மாட்டோம் என்பதை உறுதியுடன் தெரிவிக்கிறேன் என்று முஷரப் உறுதி அளித்து இருந்தார். ஆனால் அவை அனைத்தும் பொய்யான வாக்குறுதிகள் ஆகின.
உங்களின் மூலம் (பத்திரிகை மூலம்) இந்தியர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்தியாவுடன் நட்புறவுடன் இருக்கவே நாங்கள் (பாகிஸ்தானியர்கள்) விரும்புகிறோம். இனியும் ஒரு கார்கில் போர் நடைபெற அனுமதிக்க மாட்டோம்.
பாகிஸ்தான் மண்ணில் இருந்து இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவுவதை அனுமதிக்க மாட்டோம். மும்பையில் நடந்தது போன்று தீவிரவாத தாக்குதல்கள் இனி நடைபெறாது. ஏனெனில், தீவிரவாதத்தால் இந்தியாவும், பாகிஸ்தானும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.
ராணுவம் என்பது தொழில் ரிதியான அமைப்பு தான். இந்தியாவுடன் ஆன நல்லுறவுக்கு ராணுவம் தடையாக இருக்காது என நினைக்கிறேன். முஷரப் ராணுவ தளபதி ஆக இருந்த போது அவரே தன்னிச் சையாக பல முடிவுகளை எடுத்தார். இதனால் பல பிரச்சினைகள் உருவானது.
காஷ்மீர் பிரச்சினை, 1999-ம் ஆண்டில் நடந்த லாகூர் பிரகடனம் போன்ற முக்கிய பிரச்சினைகளை தீர்ப்பதில் உறுதியுடன் இருக்கிறேன். பிரதமர் அலுவலகம் தான் அதிகார மையம், ராணுவம் தான் பிரதமரிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவர்களில் யார், பெரியவர் (தலைவர்) என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். மேலும் மிகவும் அனுகூலமான நாடு என்ற அந்தஸ்தை இந்தியாவுக்கு தருவேன். அதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம் மற்றும் வியாபாரம் ஒப்பந்தம் ஏற்படும்.
பொருளாதாரமும், வர்த்தகமும் எனக்கு பிடித்த துறைகள். எனவே, பலமான பொருளாதார கொள்கைகளை கொண்டு வருவோம். அதை காத்திருந்து கவனியுங்கள். இந்தியாவுக்கு வருகை தருவதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன். பிரதமர் மன்மோகன் சிங்கும் என்னுடன் டெலிபோனில் பேசினார். வாழ்த்து தெரிவித்த அவர் இந்தியா வருகை தரும்படி அழைப்பு விடுத்தார். அவரை சந்திக்க ஆவலமாக இருக்கிறேன். இருவரும் சந்தித்து, தெற்கு ஆசியாவில் அமைதியும், வளமும் ஏற்படபாடுபடுவோம்."என்றார்.
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.