சன்னியூஸ் டி.வியின் விவாதமேடையும் நானும்

 நான் டி.விக்களை நோக்கி போவதில்லை. அப்படியானால் டி விக்கள்தான் உங்களை நோக்கி வருகிறதோ? – நீ என்ன பெரிய கொம்போ? அப்பிடி இல்லை..

நான் கோவையில் இருக்கும் போது …சென்னையில் "யாரும் கிடைக்கவில்லை "என்றாலோ—அல்லது என்மீது "அன்புகொண்ட ஒருசில நண்பர்க்ளோ" ( ஆம் ..சிலர் இருக்கிறார்கள்)..என்னை சென்னையில் கலந்துகொள்ளுமாறு அழைப்பார்கள்….நான் வேலை பளுகாரணமாக மறுக்கும்போது அவர்கள்..நான் சென்னைக்கு வரும்போது தகவல் சொல்லுமாறு கேட்பார்கள்..

அப்படிக்கிடைக்கும் வாய்ப்புக்கள்தான் என் டி.வி." டிபெட்டின்"– வரலாறு..

எந்த தொலைக்காட்சியிலும், பாஜகவிற்கு, விவாதத்தில் சமவாய்ப்புக்கள் கொப்பதில்லை.கேட்டு வாங்க முடியாது..சாமர்த்தியமாக சண்டையிட்டு எடுத்துக்கொள்ள வேண்டும்..கட்டுப்பாடான என் "ஆர்.எஸ்.எஸ்.வளர்ப்பு" இதற்கு மிகப்பெரும் தடைக்கல்..இப்போதுதான் அதை….உடைக்க முயன்று வருகிறேன்..

இவ்வளவு எதற்கு முன்னோட்டம்..காரணம்..இருக்கிறது….நேற்றைய சன் டி.வி விவாத மேடையில்.."சி.பி.ஐ.க்கு" தன்னாட்சி தேவையா? என்ற விவாதத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் எம்.பி. திரு அழகிரி அவர்கள்…சி.பி.ஐயும் காங்கிரசும்– நகமும் சதையும் போல—2ஜி யும் திமுகவும் போல–அதை ஒத்துக்கொள்ளாததது போல , கொஞ்சம்கூட கூச்சப்பாடாது பேசினார்….

காங்கிரசின் கொத்தடிமையாகவே சி.பி.ஐ. இருப்பதை அவர் விரும்பினார்..நண்பர் வீரபாண்டியனும் எப்போதும் போல அழகிரியும், காங்கிரசும் மனம் புண்பட்டுவிடாமல் பார்த்துக்கொண்டார்..ஆனால் அத்வானி மீது குற்றஞ்சாட்டும் போதுமட்டும் மிகவும் உணர்ச்சிப்பெருக்கோடு குற்றஞ்சாட்டினார்..அதற்கு நான் பதில்தர முயன்றபோது வாய்ப்புதராமல் –அடுத்தவரிடம் கேள்விகேட்டார்..

நாந்தர முயன்ற பதில் இதுதான்…

1..5 நாளைக்குமுன் பிரதமரை காப்பாற்ர முயன்ற சி.பி.ஐயை..சுப்ரீகோர்ட் கண்டித்ததற்கு உங்கள் பதில் என்ன?
2..5 மாதத்திற்கு முன்பு 2 ஜி. ஊழலில் பிரதமருக்கு தெரிந்துதான் செய்தேன் என்ற ராஜாவின் குற்றச்சாட்டுக்கு பிறகும் பிரதமர் ராஜினாமா செய்யாததற்கு உங்கள் பதில் என்ன?
3. 5 ஆண்டுகளுக்கு முன்பு போஃபர்ஸ் வழக்கில் "ரெட் அலர்ட் நோட்ஸ்" பெற்ற சோனியா சொந்தக்கார குட்ரோச்சியை தப்பிக்கவிட்டு லண்டன் வங்கியிலிருந்த "ஃப்ரீஸ்" செய்யப்பட்ட ரூ21 கோடியை சி.பி.ஐ. விடுவித்ததற்கு உங்கள் பதில் என்ன?

இந்த பதில்களுக்கு பிறகு அத்வானி பற்றிய உங்கள் குற்றச்சாட்டுக்கு நான் பதில் சொல்கிறேன் என்று சொல்ல முயன்றேன்..முடியவில்லை..

ஆக விவாத மேடைகள்..வரவர குழாயடி சண்டைகளாகி  வருகிரது..எகிறிக்குதித்தாலே வாய்ப்புக்கள் கிடைக்கிறது…

இதில் என் நிலைப்பாடு என்ன?–யோசிக்க ஆரம்பித்து விட்டேன்,,

நன்றி ; எஸ்.ஆர். சேகர்

பாஜக மாநிலப் பொருளாளர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவ ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவில்லை எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் நேற்று ஒத்திவைக்கப் பட்டன. ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல் நாடகத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு – அண்ணாமலை அரசியலில் தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதார ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதாரத்துடன் இணைக்க மோடி அழைப்பு கூட்டுறவு இயக்கத்தை, சுழற்சி பொருளாதாரத்துடன் இணைப்பதன் அவசியத்தை பிரதமர் ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று மோடி உரை இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று (நவ. 26), ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வ ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வழிகாட்டிய ஆர்.எஸ்.எஸ் சனிக்கிழமை (23-11-2024) அன்று வெளியான மகாராஷ்டிர சட்டப் பேரவைத் ...

மருத்துவ செய்திகள்

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...