சர்வதேசளவில் இந்துமதம் பரவ ஆதிசங்கரர், விவேகானந்தர் போன்றவர்களே காரணம். கால்நடையாகவே நடந்து இந்து மதத்தின் பெருமையை பரப்பினர் என பாஜக மூத்த தலைவர் எல்கே.அத்வானி தெரிவித்தார்.
பெங்களூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டு பேசியதாவது:சிறந்த மதமான இந்துமதத்தை ஆதிசங்கரர் கால்நடையாக நடந்து தெற்குமுதல் வடக்குவரை, கிழக்கு முதல் மேற்குவரை நாடுமுழுவதும் பரப்பினார். அதேபோல் 1893 ஆண்டு அமெரிக்க நாட்டின் சிகாகோநகரில் சர்வதேச இந்துமாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றியதன் மூலம் இந்துமதம் சர்வதேச அளவில் பரவியது.
விவேகானந்தனரின் பேச்சைகேட்ட அமெரிக்கர்களும் இந்து மதம் சிறந்த மதம் என்பதனை ஏற்றுக்கொண்டுள்ளனர். சிகாகோ மாநாட்டில் கலந்துகொள்ள மும்பையிலிருந்து கப்பலில் 1893 ஆண்டு விவேகானந்தர் புறப்பட்டுசென்றார். இந்த ஆண்டும் அதே தினத்தில் விவேகாந்தனரின் 150வது பிறந்த நாள் விழா மும்பையில் கொண்டாடப் படுகிறது. இதில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர் .
இந்திராகாந்தி ஆட்சியின்போது அவசரகால நிலையில் பெங்களூர் மத்தியசிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது கன்னடம் படிக்க கற்றுக்கொண்டேன். இன்னும் அதிக நாள் சிறையில் அடைக்கப் பட்டிருந்தால் கன்னடத்தை முழுமையாக கற்றுக்கொண்டிருப்பேன்.
தேசிய பாடலில் இடம்பெற்றுள்ள சிந்துநதியை காண யாரும் பாகிஸ்தான்செல்ல தேவையில்லை. திபத் எல்லையோரும் அமைந்துள்ள லடாக்பகுதியில் உள்ள மானசசரோவரா பகுதியில் சிறிய அளவில் ஓடும் சிந்துநதியை கண்டுமகிழலாம்.தற்போது அதனால் பாகிஸ்தான் பயனடைதாலும், ஒன்றாய் இருந்த பாரத நாட்டின் உன்னதமானநதி அது. சிந்து நதியில்லை என்றால் இந்து மதம் இல்லை என்று முன்னாள்பிரதமர் ஜவகர்லால் நேருவால் புகழப்பட்ட நதி சிந்து என்றார்.
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ... |
இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.