யாசின் மாலிக் ஆதரவால் சீமானுக்கு என்ன லாபம்?

 யாசின் மாலிக் ஆதரவால் சீமானுக்கு என்ன லாபம்? காஷ்மீர் பயங்கரவாத சக்திகளிடம் ஏன் இந்த அக்கறை? என்ன ஆதாயம்? என்று பிரிவினைவாதி யாசின் மாலிக்கை அழைத்து கடலூரில் பொதுக் கூட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை கண்டித்து இந்து முன்னணித் தலைவர் ராம.கோபாலன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடலூரில் பொதுக்கூட்டமாக நடைபெற இருந்த இலங்கைத் தமிழர் படுகொலை நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் காஷ்மீர் பயங்ரவாத தலைவன் யாசின்மாலிக் கலந்துகொள்வதை இந்து முன்னணி கடுமையாக எதிர்த்தது. அதனை அடுத்து அக்கூட்டத்தை அரங்கத்திற்குள் நடத்தினர். இதனை நடத்தியவர்கள் மீது இந்து முன்னணி வழக்குத் தொடர்ந்திருக்கிறது.

யாசின்மாலிக் காஷ்மீர் பயங்கரவாதி. நம் நாட்டுக்கு எதிராக செயல்படுபவர். காஷ்மீரில் ராணுவத்தின்மீது தாக்குதல் நடத்த மாணவர்களையும், இளைஞர்களையும் தூண்டி விட்டு, ராணுவம் தங்களைத் தற்காத்துக் கொண்டால், இந்திய ராணுவம் அப்பாவி இளைஞர்களைக் கொன்று குவிப்பதாக நாடகமாடி வருபவர்.

ஆரம்பித்திலிருந்து மத்திய அரசு முஸ்லீம் ஓட்டுக்களை ஒட்டுமொத்தமாகப் பெறுவதற்காக பயங்கரவாதிகளிடம் சலுகைகளைக் காட்டி, மென்மையாக நடந்து கொண்டு வருகிறது. இதனைப் பயன்படுத்தி இன்று அவர் உள்ளூர் தலைவர்களைக் கையில் போட்டுக் கொண்டு நாட்டுக்கு எதிராக விஷத்தைக் கக்கி வருகிறார். ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்தி, ஜனநாயகத்தை அழிப்பது அவர்களுடைய தந்திரம். ஜனநாயகத்தின் பெயரால் பிரிவினைவாதிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடம் கொடுப்பது ஜனநாயகத்தின் கோழைத்தனம்.

இந்த பயங்கரவாதி இலங்கைத் தமிழர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிப்பதாகப் பேசுவது, சில நல்ல உள்ளகளை தன் வலையில் வீழ்த்தத்தான்.

தேசியத் தலைவர்கள் பயங்கரவாதத்தை நாசூக்காகக் கையாண்டு வளர்த்து விட்டதால், இவர்கள் ஊக்கம் பெற்று வருகிறார்கள்.

இந்த பயங்கரவாதிகள் மாவோயிஸ்ட்களுடன் கைகோத்துக் கொண்டு நாடு முழுவதும் உள்ள பிரிவினைவாதக் குழுக்களுக்குத் தேவையான ஆயுதங்கள், ராணுவப் பயிற்சிகள் கொடுப்பதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன. மத்திய அரசின் கண் எதிரிலேயே ஜனநாயகம் சீர்குலைய அனுமதிப்பது வெட்கக் கேடானது.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், பா.ஜ.க. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரை விமர்சிக்கும் தைரியம் சீமானுக்கு எங்கிருந்து வந்தது?

யாசின் மாலிக் ஆதரவால் சீமானுக்கு என்ன லாபம்? காஷ்மீர் பயங்கரவாத சக்திகளிடம் ஏன் இந்த அக்கறை? என்ன ஆதாயம்? என்ற கேள்விகள் எழுகின்றன.

இது தனித் தமிழ்நாடு பிரிவினை விஷம் மீண்டும் ஊன்றப் படவும், இளைஞர்களைத் திசைதிருப்பவும் நடக்கும் நாடகம் என்று விஷயம் அறிந்தவர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள். இதனை மாநில அரசு கருத்தில் கொண்டு, முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிக்கு தமிழ்நாட்டில் இடம்கொடுப்பதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. மத்திய, மாநில அரசுகள் பிரிவினைவாத, பயங்கரவாத தீய சக்திகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...