ரஷ்ய புரட்சி ஏற்பட்டு ஜார் மன்னர் தூக்கி எறியப்பட்டு "போல்ஷ்விக்குகள்" என்ற கம்யுனிஸ்ட்கள் புகழ் பரவத்துவங்கிய நேரம்.. ரவீந்திர நாத் தாகூர் ரஷ்யாவிற்கு சென்றார்..அங்கு நடந்த ரஷ்ய புரட்சியின் தாக்கத்தை கண்ணுற்றார் ..
உலகமே ஒரு புதிய சித்தாந்தத்தை பார்த்து வாய்பிளந்து நின்ற போது தாகூர் அதை வேறுவிதமாக பார்த்தார்..
தாகூர் எழுதினார்..
1..கருத்துசொல்லும் சுதந்திரமும் உரிமையும் பறிக்கப்பட்டபோது ஜார்மன்னர் தூக்கி எறியப்பட்டார்.கம்யுனிச்ட்களும் தங்களுக்கு எதிரான கருத்துக்களின் குரல்வளையை நசுக்கும்போது இதே விளைவை சந்திக்க வேண்டியிருக்கும்…
2..ஜார்மன்னர் போன்று அரசே கட்டவிழ்த்துவிடும் வன்முறையையும், சர்வாதிகாரத்தையும், இந்த புரட்சியாளர்கள் செய்ய வாய்ப்புள்ளது..அப்போது இவர்களுக்கும் ஜார்மன்னருக்கு ஏற்பட்டகதிதான் ஏற்படும் ..
தாகூருக்கு என்னே ஒரு தீர்க்கதரிசனம்..உலகம் முழுவதும் வளைத்துபோடவேண்டும் என்ற ஆசையோடு வன்முறையில் பரவிய கம்யுனிசம், அது தொடங்கிய நாட்டிலேயே 70 ஆண்டுகளுக்குள் முடிந்தது.
தகவல் தொடர்புத்துறையில் 20 ஆண்டுகள் பின்னோக்கி இருக்கும் இந்திய கம்யுனிஸ்ட்களுக்கு இது எப்போது தெரியுமோ..தெரியவில்லை..
"டிரேட்யூனியன்" வசூலிக்கும் சந்தாவும் –கோடிக்கணக்கான அசையா சொத்துக்களும், 80 வயது சூபர்சீனியர் சிடிசன் " காம்றேடுக்களும்தான் இந்தியாவில் கம்யுனிஸ்ட்கள் இருந்ததற்கான கடைசி ஆதாரங்கள்.
நன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல்
பாஜக மாநிலப் பொருளாளர்
பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ... |
காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது. |
மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது. |
Leave a Reply
You must be logged in to post a comment.