இந்தியா டுடே நடத்திய கலந்தாய்வில் உலகம் முழுதிலிருந்தும் வந்திருந்த மக்கள் கலந்துக் கொண்டனர், அதில் பேசிய திரு மோடி அவர்களில் பேச்சில் இருந்து எனக்கு பிடித்தவை சில.
நாம் நம் வேலை வாய்ப்பு திட்டங்களை வேலை உத்திரவாதம் என்று சொல்வதை விட, வளர்ச்சி உத்திரவாதம் என்று சொல்லவேண்டும். நாம் மக்களிடம் நீங்கள் ஏழைகள், உங்களால் உங்களை காப்பாற்றிக் கொள்ள முடியாது, ஆகையால் நூறு நாட்கள் வேலை தருகிறோம் என்று சொல்வதை விட, உங்கள் நூறு நாட்களை தேசத்தின் வளர்ச்சிக்காக தாருங்கள் என்று ஏன் சொல்லக் கூடாது ?
ஒரு கோவிலை கட்டுவதற்கு பல பணியாளர்கள் கல் உடைத்துக் கொண்டிருந்தனர். அவர்களிடல் பலரிடம் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டபோது, அவர்கள் நாங்கள் கல் உடைத்து வாழ்கை நடத்துகிறோம் என்றனர். ஆனால் ஒருவனோ நான் ஒரு கோவிலை உருவாக்குகிறேன் என்றான். ஆகையால் எல்லாமே நம் மனநிலையை பொறுத்தது. நம் மனநிலைதான் நம் எதிர்காலத்தை உருவாக்க வல்லது. அரசாங்கத்தால் தேசத்தை மாற்ற முடியாது. மக்கள்தான் அந்த உண்மையான மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.
குஜராத்தில் விவசாயிகள் மின்சாரம் இல்லை என்று போராடிக் கொண்டிருந்தனர். நாங்கள் சொன்னோம், நீங்கள் மின்சாரத்தை சார்ந்து இருக்காதீர்கள். உங்களுக்கு தேவை மின்சாரம் அல்ல, தண்ணீர் என்றோம். "சுஜலம், சுஃபலம்" என்கிற ஏரி திட்டத்தில் பல விவசாயிகளோடு கலந்துரையாடி, அவர்களையும் அந்த திட்டத்தில் ஒரு அங்கமாய் சேர்த்துக் கொண்டு, இரண்டே வருடத்தில் அத்திட்டத்தை முடித்தோம். இன்று அந்த ஏரி தண்ணீரால் பல விவசாய நிலங்கள் செழிப்படைந்துள்ளன. இப்போது விவசாயிகள் குஜராத்தில் விவசாயம் என்பது பாசணம் சார்ந்தது என்றும் (வெறும் மின்சாரம் சார்ந்தது அல்ல) சிந்திக்க தொடங்கிவிட்டனர். நாம் மக்களுக்காக உழைக்க வேண்டுமே தவிர அரசுக்காக அல்ல.
இன்று நாம் ஒரு ஜனநாயக நாட்டில் இருக்கிறோம். நம் அரசாங்க ஊழியர்கள் மக்களுக்காக உழைக்க வேண்டுமே தவிர அரசாங்கத்துக்காக அல்ல. குஜராத்தில் அரசு ஊழியர்கள் அவ்வாறுதான் செயல்படுகிறார்கள். குஜராத்தில் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றாலல், இதை ஏன் தேசம் முழுதும் நாம் ஏற்படுத்த முடியாது ?
இந்திய அரசாங்கமோ, மக்களுக்கு பல உரிமைகளை தருவதாய் தன்னை தானே புகழ்ந்து கொள்கிறது. ஆனால் இந்திய சட்ட அமைப்பே மக்களுக்கு போதிய உரிமைகளை தந்துள்ளது. நமக்கு தேவை உரிமை சட்டங்கள் அல்ல அந்த உரிமையை நிலைநாட்டும் செயல்பாடுகள் தான். இரண்டு நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் வேட்டைக்கு சென்றார்கள். அவர்கள் புலி வரும் என்று எதிர்ப்பார்க்காத நிலையில் புலி வந்து விட்டது. உடனே அவர்கள் தங்களுடைய துப்பாக்கி உரிமத்தை (லைசென்ஸ்) அதனிடம் காட்டினார்கள். அதுதான் இன்று நாட்டில் நடந்துக் கொண்டிருக்கிறது. செயல்பாடுகள் இல்லாமல் வெறும் சட்டங்களால் என்ன பயன் ?
குறை தீர்க்கும் அமைப்புதான் ஜனநாயகத்தின் பெரும் பலம். குஜராத்தில் ஏழையில் பரம ஏழை கூட அரசாங்க அதிகாரிகளிடம் சென்று பேசலாம். மக்கள் சக்தியுள்ளவர்களாய் மாற்றியதன் மூலமாக அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட துவங்கி விட்டன. கணினிமயமாக்குதல் மூலமாக குடும்ப அட்டைகள் (ரேஷன் கார்டுகள்) குறைபாடுகள் இல்லாமலும், ஏமாற்று வேலைகள் இல்லாமலும் சிறப்பாக நடைப்பெறுகின்றன.
மாநில எல்லைகளில் வரி வசூலிப்பதை பொறுத்தவரை, நாங்கள் அனைத்தையும் ஒளிவு மறைவில்லாமல் தொழில்நுட்பத்தின் உதவியோடு செய்ததின் மூலமாக 2000 கோடி லாபம் ஈட்டியுள்ளோம்.
ஆக இப்படி பல நுட்பங்களை (ஐடியாக்கள்) நாம் பொதுமை படுத்த வேண்டும். ஒரு தனிப்பட்ட தலைவரையோ, ஒரு தனி மனிதரையோ சார்ந்த கருத்துக்களோ, எண்ணங்களோ, நுட்பங்களோ நீண்ட காலத்திற்கு பயன்படாது.
Thanks; Enlightened Master
Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ... |
முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ... |
காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.