கூட்டணி தர்மத்தைக் கடைபிடிக்கவேண்டும் மூன்றாவது அணி என்பது தோல்வியடைந்த ஒன்றாகும் என்று பாஜக. மூத்த தலைவர் வெங்கய்யநாயுடு கருத்து தெரிவித்துள்ளார் .
இதுகுறித்து அவர் வியாழக் கிழமை கூறியதாவது: ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர்கள் சிலர் கூட்டணிதொடர்பாக தேவையற்ற கருத்துகளை கூறிவருகின்றனர்.
முதல்வர் நரேந்திரமோடி குறித்து அவர்கள் கூறிவரும் கருத்துகள் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கோ அல்லது நாட்டுக்கோ நல்லதல்ல . அக்கட்சியினர் கூட்டணி தர்மத்தைக் கடைபிடிக்கவேண்டும். மூன்றாவது அணியை அமைக்கும்முயற்சி ஏற்கெனவே தோல்வியடைந்த ஒன்றாகும். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிசெய்த முறைகேடுகளுக்கு அக்கூட்டணி கட்சிகளே பொறுப்பேற்கவேண்டும். அவர்களை மக்கள் ஏற்கமாட்டார்கள்.
நாட்டை ஆளும் தகுதியை ஐக்கிய முற்போக்கு கூட்டணி இழந்துவிட்டது.
அதற்கு சரியான மாற்று பாஜக. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிதான். காங்கிரஸ் கட்சியிடமிருந்து நாட்டை விடுவிக்கவேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர் என்றார் நாயுடு.
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |
குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.