பாஜக,,வின் பாராளுமன்ற பிரச்சாரக் குழு தலைவராக நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்தான் பிரதமர் வேட்பாளர் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவருவதாக மக்கள் கருதுகின்றனர். இந்நிலையில் ஆரம்பம் முதலே நரேந்திரமோடியை எதிர்த்துவரும் ஐக்கிய ஜனதா தளம்கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிப்பது பற்றி விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்று போக்குகாட்டி வருகிறது.
இந்நிலையில் பாஜக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் ஐக்கிய ஜனதாதளம் குறித்து கூறியதாவது:-
கட்சியின் பிரதமர்வேட்பாளராக யார் இருப்பார், இருக்க மாட்டார் என்பது பற்றி ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு உத்தரவாதம் தந்து இருக்கிறோம் என நான் நினைக்கவில்லை. பாஜக.,வின் பிரதமர் வேட்பாளராக யார் இருப்பார் என்று ஐக்கிய ஜனதாதளம் முடிவுசெய்ய முடியாது.
யாரை நிறுத்தவேண்டும் என்று முடிவு பன்ன வேண்டியது பாஜக.,வின் வேலை. எங்களின் பழையகூட்டாளியான ஐக்கிய ஜனதாதளம் கட்சியுடன் உறவை முடித்துக் கொள்ள நாங்கள் விரும்பவில்லை.
பாஜக -ஐக்கிய ஜனதா தள கூட்டணிக்கே மக்கள் வாக்களித்து பீகார்அரசை அமைத்துள்ளனர். ஒருதனிக்கட்சிக்கோ அல்லது தனிஒருவருக்கோ இந்த அரசு அமையவில்லை. ஆனால் இப்போதைக்கு மோடிதான் பிரதமர்வேட்பாளர் அல்லது இல்லை என்று உறுதியாக சொல்லமுடியாது என்று அவர் கூறினார்.
அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ... |
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.