ஊழல் மற்றும் விலைவாசி உயர்வினை கண்டித்து, வரும், 17ம் தேதிமுதல், 30ம் தேதிவரை, நாடுதழுவிய அளவில், சிறைநிரப்பும் போராட்டத்தை நடத்த, பாஜக முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து , பா.ஜ., செய்தி தொடர்பாளர் முக்தர் அப்பாஸ் நக்வி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின், 10 ஆண்டுகால ஆட்சியில், நாடுமுழுவதும், ஊழலும், மோசடியும் பெருகிவிட்டன. கடுமையாக விலைவாசியும் உயர்ந்துள்ளது. இவற்றை கண்டித்து, வரும், 17ம் தேதிமுதல், 30ம் தேதிவரை, நாடுதழுவிய அளவில், சிறைநிரப்பும் போராட்டத்தை, பா.ஜ.க, நடத்துகிறது. இந்தப்போராட்டம், அனைத்து மாநில மற்றும் மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும். வரும், 25 ,26ம் தேதிகளில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில், கட்சியின் தேசியதலைவர் ராஜ்நாத் சிங், லோக்சபா எதிர்க் கட்சி தலைவர் சுஷ்மாசுவராஜ், கட்சியின் மூத்த தலைவர்கள் முரளி மனோகர்ஜோஷி மற்றும் நிதின்கட்காரி உள்ளிட்டோர் பங்கேற்பர். என்று முக்தர் அப்பாஸ் நக்வி கூறினார்.
சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ... |
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ... |
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
Leave a Reply
You must be logged in to post a comment.