கேரளாவில் வீடுகள் , அலுவலகங்களுக்கு சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார்பேனல் கருவிகளை அமைத்துதருவதாக கூறி பல லட்சம் மோசடிசெய்ததாக ஒரு தனியார் நிறுவனத்தின் மீது புகார்கள்கிளம்பியது.
இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஆர்பி. நாயர் எனும் பிஜு ராதா கிருஷ்ணன் அவரது மனைவி சரிதா எஸ்.நாயர் மீது பலரும் காவல்துறையில் புகார்மனு கொடுத்தனர்.போலீசார் வழக்குப் பதிவு செய்து முதலில் பிஜு ராதாகிருஷ்ணனின் மனைவி சரிதா எஸ். நாயரை கைதுசெய்தனர். விசாரணையில் சரிதாநாயருடன் முதல்வர் உம்மன் சாண்டியின் உதவியாளர் டென்னிஜோப்பன் பாதுகாவலர் கன்மேன் சலீம் ராஜ் ஆகியோருக்கு தொடர்பிருந்தது தெரிய வந்ததையடுத்து அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சூரியமின்சக்தி ஊழலில் முதல்வருக்கும் தொடர்புள்ளது என்று குற்றம் சுமத்தியுள்ள பா.ஜ.க முதல்வர் உம்மன்சாண்டி பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது
மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ... |
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |
Leave a Reply
You must be logged in to post a comment.