உத்தரகாண்ட் கனமழைக்கு ருத்ர பிரயாகை, சமோலி உள்ளிட்ட இரண்டு மாவட்டங்கள் பேரழிவை சந்தித்துள்ளன. அதிலும் குறிப்பாக கேதர் நாத், ருத்ர பிரயாகை வழித்தடம் காணாமலே பொய்விட்டது. அந்த சாலையை செப்பனிடவே இரண்டு ஆண்டுகள் ஆகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன .
கேதர்நாத், பத்ரிநாத் புனித தலங்களுக்கு செல்லும்பாதையில் உள்ள கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. காட்டாற்றுவெள்ளம் போல் பல இடங்களில் தண்ணீர் கிளம்பியதில் சுமார் 180 கிராமங்கள் இருந்தஇடம் தெரியாமல் அழிந்துவிட்டன. அந்த கிராமங்களில் வசித்த பல்லாயிர கணக்கான மக்கள் என்னஆனார்கள் என்றே தெரியவில்லை. கேதர்நாத், ருத்ர பிரயாகை சாலையில் சுமார் 50 ஆயிரம்பேர் இன்னமும் தவித்தபடி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பேரழிவு ஏற்பட்டதும் மீட்புகுழுக்களை அனுப்பிவிட்டு மத்திய அரசு மெத்தனமாக இருந்துவிட்டது. பெருமளவில் மக்கள் பலியாகிவிட்டனர் என்று தெரிந்தபிறகே மத்திய அரசு முழு வீச்சில் இறங்கியது.
கேதர்நாத்தில் வெள்ளத்தால் அடித்துசெல்லப்பட்ட நூற்றுக் கணக்கான வீடுகள் மற்றும் வாகனங்கள் எங்கேசென்றன என்றே தெரியவில்லை. அவற்றை தேடும்பணியை தொடங்க இனி ஒருமாதமாகலாம். கேதர் நாத்தை சுற்றி சுமார் ஆயிரம்பேர் கடைகள் வைத்திருந்தனர். இவர்கள் அனைவருமே வெள்ளத்தால் அடித்து செல்லப் பட்டிருக்கிறார்கள். இவர்களில் கேதர் பள்ளத் தாக்குகளில் இருந்து 985 பேரை மீட்டுள்ளனர். மற்றவர்கள் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ... |
ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.