பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வரும் 27ம் தேதி மும்பைவரும் நரேந்திரமோடியை வரவேற்க, பாஜக.வினர் பிரமாண்ட ஏற்பாடு செய்துவருகின்றனர். பாஜ தேர்தல் பிரசார குழுத்தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திரமோடி சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இந்தபொறுப்பு
வழங்கப்பட்ட பிறகு முதல் முறையாக வரும் 27ம் தேதி மும்பைவரும் அவருக்கு, மகாராஷ்டிரா மாநில பா.ஜ.க சார்பில் உற்சாகவரவேற்பு அளிக்க ஏற்பாடு நடந்துவருகிறது.
மோடி விமானத்தில் இருந்து வந்து இறங்கும் சாந்தா குரூசில் இருந்து அவர் மும்பையில் செல்லும் இடங்கள்வரை எல்லா இடங்களிலும் அவரை வரவேற்று பிரமாண்ட பேனர்கள் வைக்கப்பட உள்ளன. மும்பையில் பங்குசந்தை அரங்கில் நடைபெறும் ‘பிஹைன்ட் ஏ பில்லினர்பேலட்’ என்ற புத்தக வெளியீட்டுவிழாவில் அவர் கலந்துகொள்கிறார். அதில், நாட்டுநடப்பு, அரசியல் நிலவரம் குறித்து உரையாற்ற உள்ளார். பிறகு , தாஜ் ஓட்டலில் இந்திய தொழில்சம்மேளன மாநாட்டில் கலந்துகொண்டு பேசுகிறார். தொடர்ந்து, தேர்தல்பிரசார உத்திகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |
இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ... |
நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.