பீகாரில் ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து 3 எம்எல்ஏ.க்கள் நேற்று பா.ஜ.வுக்கு தாவியுள்ளனர் இதனால், நிதிஷ்குமார் அரசுக்கு நெருக்கடி உருவாகியுள்ளது.
பாஜக . பிரசாரக்குழு தலைவராக நரேந்திரமோடி நியமிக்கப்பட்டதை எதிர்த்து கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதாதளம் வெளியேறியது. பீகாரில் கடந்த 19ந் தேதி சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 243 உறுப்பினர்களில் அரசுக்குஆதரவாக 126 ஓட்டுக்கள் கிடைத்தன. காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள், சுயேச்சைகள் தலா 4பேர், மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ. ஒருவர் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர் . இது பெரும்பான்மையை விட 4 எண்ணிக்கை அதிகம்.
இந்நிலையில், பாட்னாவில் நேற்றுநடந்த பா.ஜ.க கூட்டத்தில் கட்சி தலைவர் ராஜ்நாத்சிங் கலந்துகொண்டார். அப்போது, ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த ராம்சரித்திர பிரசாத் சிங், பால் முகுந்த்சர்மா, சுஜித்மஜி ஆகிய 3 எம்எல்ஏ.க்கள் பாஜக .வில் இணைந்தனர் . மேலும் சில எம்எல்ஏ.க் களும் பா.ஜ. வுக்கு வருவார்கள் என அவர்கள் தெரிவித்தனர். பாஜக.,வை பெரும் நெருக்கடியில தள்ள நினைத்த நிதிஷ் அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ... |
அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ... |
முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.