விமானப்படை ஹெலிகாப்டர் விபத்தில் தமிழக விமானப்படை அதிகாரி உயிரிழப்பு

 விமானப்படை ஹெலிகாப்டர் விபத்தில்  தமிழக விமானப்படை அதிகாரி உயிரிழப்பு உத்தர்காண்ட் பெரும் வெள்ளத்தில் சிக்கியோரை மீட்கும்பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த 20பேரில் தமிழகத்தை சேர்ந்த விமானப்படை அதிகாரியான பிரவீனும் ஒருவர் என்பது தெரியவந்துள்ளது.

இந்த சோகசெய்தியால் அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைதுள்ளனர். உத்தர்காண்ட் மாநிலம் இதுவரை கண்டிராத பெருவெள்ளசேதத்தை எதிர் கொண்டிருக்கிறது. இதுவரை சுமார் 1000 க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் பல்லாயிர கணக்கானோரை மீட்கும்பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது . இப்படி மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் நேற்று கெளரிகுண்ட் பகுதியில் விபத்துக்குள்ளானது. இதில் ராணுவ அதிகாரிகள், விமானப்படை அதிகாரிகள் உள்ளிட்ட 20 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 12பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சிலரது உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மதுரை தியாகராய பொறியியல்கல்லூரியில் கடந்த 2007ம் ஆண்டு பி இ. முடித்த பிரவீன் அதிக ஊதியத்துடன் TCS நிறுவனத்தில் கிடைத்தவேலையை உதறினார். 2009 ம் ஆண்டு விமானப்படையில் இணைந்தார். மேற்கு வங்க மாநிலம் பராக்பூர் விமானபடை தளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பிரவீன், இரண்டு நாட்களுக்குமுன்பு உத்தர்காண்ட் மீட்புப்பணிகளுக்கு சென்றார். புறப்படும் முன்னர் குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசியுள்ளார். பிறகு மீட்புபணி முடிந்தபின்னர் பேசுவதாகக் கூறியுள்ளார்.இந்நிலையில் விபத்து ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டில்லியில் குடிநீர் இல்லை ஆனால ...

டில்லியில் குடிநீர் இல்லை ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது மோடி குற்றம்சாடியுள்ளார் 'டில்லியில் குடிநீர் இல்லை. ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது' என ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவைய ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவையா சபாநாயகர் அப்பாவுக்கு அண்ணாமலை கேள்வி சபாநாயகர் அப்பாவுக்கு, பாலியல் கொடுமை மேடை நகைச்சுவையா என ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர்வு காணாத திமுக அரசு – அண்ணாமலை நெற்பயிர்களின் ஈரப்பதம் அதிகரிப்பது வழக்கமான ஒன்று. இதற்கு நிரந்தரத் ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவ ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம் – ராஜ்நாத் சிங் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெ ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் இடம் டிரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நித ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நிதி – தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி “தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என ...

மருத்துவ செய்திகள்

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...