உத்தரகாண்ட் மாநிலத்தில் மழைவெள்ளம் , நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாஜக முன்னாள் முதல்வர் பி.சி.கந்தூரி இன்று பார்வையிட்டார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது ;
உத்தரகாண்டில் பலஆண்டுகள் இயற்கை சீற்றங்கள் நடைபெற்றுள்ளன . ஆனால், நாம் அவற்றில் இருந்து பாடங்கள் கற்றுக் கொள்ளாதது துரதிர்ஷ்டவசமானது. அங்குள்ள சூழலியலை பாதிக்கும்வகையில் காடுகளை அழித்து அணைகள் கட்டியது தான் இத்தகைய மிக பெரிய பேரழிவுக்கு மூலகாரணம்.
எனவே, இமய மலை பிராந்தியத்தின் பலவீனமான சூழலியல் மற்றும் வளர்ச்சிக்கு மத்தியில் சமநிலையை உருவாக்குவதற்கான அளவுகோல்தேவை என்பதால், இதற்காக தனி அமைச்சகத்தை மத்திய அரசு உருவாக்கவேண்டிய தருணம் இது.
கனமழைபெய்யும் என்று அறிவித்தபோது, சர்தாம்யாத்திரை சென்ற பக்தர்களை மாநில அரசு ஏன் தடுத்துநிறுத்தவில்லை. அவ்வாறு செய்திருந்தால் இந்த அளவுக்கு அதிக உயிர்ச் சேதம் ஏற்பட்டிருக்காது. எனவே, மலைப் பகுதியில், இயற்கைசீற்றம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும்கருவியை மத்திய-மாநில அரசுகள் அமைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ... |
தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ... |
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.