குஜராத் அரசு வாக்களிப்பதினை கட்டாயமாக்கும் சட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது. இந்தசட்டத்தின் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்பிரதிநிதியை வாக்காளர்கள் திரும்பப்பெறவும் முடியும் என்று குஜராத் முதல்வர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு அவர் மேலும் கூறியதாவது,
நல்லவர்களை அரசியலுக்கு கொண்டுவருவதற்கு இதைப் போன்ற தேர்தல் சீர்திருத்தங்கள் மிகவும் அவசியமான ஒன்றாகும்.தற்போதைய நிலையில், ஒருவேட்பாளரின் தனிப்பட்ட தகுதியை கருத்தில்கொள்ளாமல் கட்சியைமட்டும் மனதில்வைத்து மக்கள் பிரதிநிதியை தேர்ந்தெடுக்கிறார்கள்.
ஆனால், அவர்களை திரும்பப் பெறும் உரிமையும் மக்களுக்கு தரப்பட்டால் எல்லா மக்கள் பிரதிநிதிகளையும் அவர்கள் வெளியேற்றிவிடுவார்கள்.
இதற்கு பயந்தாவது, அரசியல்கட்சிகள் நல்ல வேட்பாளர்களுக்கு சீட்வழங்கும் நிலைக்கு தள்ளப்படும். இதன் மூலம் நல்லவர்கள் அரசியலுக்குவருவார்கள்.
இந்திய ஜனநாயகம் மேலும்முன்னேறும் என்ற நோக்கத்தில் இந்த புதியசட்டத்தை எனது அரசு அறிமுகப்படுத்தியது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக குஜராத்கவர்னர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ... |
வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ... |
Leave a Reply
You must be logged in to post a comment.