உத்தர்காண்ட் மாநிலத்தையே உருக்குலைத்து போட்டிருக்கும் வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத்தாண்டும் என தேசியபேரிடர் நிவாரண ஆணையத்தின் துணைத்தலைவர் சஷிதர்ரெட்டி தெரிவித்துள்ளார்.
உத்தர்காண்ட் மாநிலத்தை நிலை குலையச் செய்த வெள்ளத்தில் சிக்கிய ஆயிரக் கணக்கானோரின் கதி என்னவென்று தெரியவில்லை. இந்நிலையில் அம்மாநில சபாநாயகர் கோவிந்த்சிங், வெள்ளபாதிப்புக்கு 10 ஆயிரம்பேர் பலியாகி இருக்கலாம் என கூறியிருந்தார். ஆனால் இதை மாநில அரசு மறுத்து வந்தது .
இந்நிலையில் டெல்லிய்ல் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தேசியபேரிடர் நிவாரண ஆணையத்தின் துணைத்தலைவர் சஷிதர்ரெட்டி, உத்தர்காண்ட் சபாநாயகர் கூறியதை போல் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தைதாண்டலாம். ஆனால், சரியான எண்ணிக்கையை தற்போது உடனடியாக உறுதியாக கூறமுடியாது என்றார்.
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |
தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ... |
Leave a Reply
You must be logged in to post a comment.