சீக்கிய கலவரம்தொடர்பாக ஜெகதீஷ்டைட்லர் தாக்கல்செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

 சீக்கியர்களுக்கு எதிராக 1984 ம் ஆண்டு நடைபெற்ற கலவரம்தொடர்பாக தன்மீது டெல்லி நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணையை எதிர்த்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெகதீஷ்டைட்லர் தாக்கல்செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

டைட்லர் தரப்பில் தாக்கல்செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த நீதிபதிகள் தற்போதைய நிலையில் டைட்லரின் மனுமீது உச்சநீதி மன்றம் தலையிட விரும்பவில்லை. அதனால் அவரதுமனு தள்ளுபடி செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளனர் .

1984 ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியை அவரது சீக்கிய பாதுகாவலர்கள் சுட்டுக்கொன்றனர். அதையடுத்து டெல்லியில் நடந்த கலவரத்தில் 5000க்கும் அதிகமான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த கலவரத்தில் ஜெகதீஷ் டைட்லரும் ஈடுபட்டார் என்று வழக்கு தொடரப்பட்டது.

பல ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் டைட்லருக்கு எதிரான சாட்சிகள் இல்லை என கூறி வழக்கை முடித்துக்கொள்ள அனுமதிகேட்டு நீதிமன்றத்தில் 2009 ஏப்ரல் 2 ம் தேதி சிபிஐ. மனு தாக்கல்செய்தது. அதை எதிர்த்து கலவரத்தில் பாதிக்க பட்டவர்கள் . நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர் . அவற்றை விசாரித்த நீதிமன்றம் டைட்லருக்கு எதிரானவழக்கை தொடர்ந்து நடத்தும்படி கடந்த ஏப்ரல் 10ம் தேதி உத்தரவிட்டது.

அந்த உத்தரவை எதிர்த்து ஜெகதீஷ்டைட்லர் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதைவிசாரித்த நீதிமன்றம் சிபிஐ. நீதிமன்ற உத்தரவுக்கு தடைவிதிக்க முடியாது என கூறி விசாரணையை செப்டம்பர் 18 ம் தேதிக்கு தள்ளி வைத்தது .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டில்லியில் குடிநீர் இல்லை ஆனால ...

டில்லியில் குடிநீர் இல்லை ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது மோடி குற்றம்சாடியுள்ளார் 'டில்லியில் குடிநீர் இல்லை. ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது' என ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவைய ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவையா சபாநாயகர் அப்பாவுக்கு அண்ணாமலை கேள்வி சபாநாயகர் அப்பாவுக்கு, பாலியல் கொடுமை மேடை நகைச்சுவையா என ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர்வு காணாத திமுக அரசு – அண்ணாமலை நெற்பயிர்களின் ஈரப்பதம் அதிகரிப்பது வழக்கமான ஒன்று. இதற்கு நிரந்தரத் ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவ ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம் – ராஜ்நாத் சிங் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெ ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் இடம் டிரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நித ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நிதி – தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி “தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என ...

மருத்துவ செய்திகள்

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...