அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை எதிர் கொள்ள வசதியாக மோடி தலைமையில் 20 குழுக்களை பாரதிய ஜனதா கட்சி அமைத்துள்ளது.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், டில்லி உள்ளிட்ட, ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள், விரைவில் நடக்கவுள்ளன. இதைத் தொடர்ந்து, அடுத்தாண்டு, மக்களவைத் தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தல்களுக்கு, பாரதிய ஜனதா கட்சி இப்போதே தயாராகி வருகின்றது. பாரதீயஜனதா கட்சியின் தேர்தல் பிரசார குழு தலைவராக, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி நியமிக்கப்பட்டுள்ளார். பொதுக் கூட்டங்களை நடத்துவது, கட்சியின் தேர்தல் அறிக்கைகளை, இளைஞர்கள், பெண்களிடம் எடுத்துக் கூறுவது, உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக, தேர்தல் பிரசார கமிட்டியை அமைக்கும் நடவடிக்கைளும் துவங்கியுள்ளன.
இது தொடர்பாக, விவாதிப்பதற்காக, பா.ஜ.கவின் பார்லிமென்ட் குழு கூட்டம், டெல்லியில் கூடியது. பா.ஜ., தேசிய தலைவர், ராஜ்நாத் சிங் மற்றும் மூத்த தலைவர்கள் அத்வானி உள்ளிட்டோரும், தேர்தல் பிரசார குழு தலைவர் நரேந்திர மோடியும், இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதில், யார், யாருக்கு எந்தெந்த பொறுப்புகளை கொடுப்பது என்பது குறித்து, கட்சியின் மூத்த தலைவர், அத்வானி, சில யோசனைகளை தெரிவித்தார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அனந்தகுமார், தேர்தல் குழுக்கள் பற்றி விளக்கிக் கூறியதாவது: இதன்படி பாரதிய ஜனதாவின் அனைத்து தேர்தல் குழுக்களையும் அக்கட்சியின் மூத்தத் தலைவர் அத்வானி வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மத்திய பிரசார குழுவில் இடம்பெற்றுள்ளார். மோதி தலைமையிலான தேர்தல் பிரசாரக் குழுவில் மூத்த தலைவர்கள் வெங்கய்யா நாயுடு, நிதின் கட்ரிக்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதாவின் தொலைநோக்கு திட்டங்களை தயாரிக்கும் குழுவுக்கு நிதின் கட்கரி தலைமை வகிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, நிதின் கட்கரி டெல்லி விவகாரங்களை கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவுக்கு மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஊடக விவகாரங்களை கவனிக்கும் பொறுப்பு சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி, அமித் ஷா ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. பேரணிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பு அனந்த்குமாருக்கும், வருண் காந்திக்கும் அளிக்கப்பட்டுள்ளது.
அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ... |
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ... |
Leave a Reply
You must be logged in to post a comment.