வெள்ளையப்பனும் , ஆடிட்டர் ரமேஷும் செய்த தவறு தான் என்ன

 வெள்ளையப்பனும் , ஆடிட்டர் ரமேஷும் செய்த தவறு தான் என்ன கொலைசெய்யப்பட்ட இந்து முன்னணி மாநிலசெயலாளர் வெள்ளையப்பனும், பா.ஜ.க பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷும் செய்த தவறு தான் என்ன.. ஏன் இவர்களைக் கொலைசெய்தனர் என பாஜக தேசியசெயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்..

வேலூரில் நடந்த வெள்ளையப்பன் நினைவுஅஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வேலூரில் கடந்த 14 நாட்களுக்கு முன்பு இந்துமுன்னணி மாநில செயலாளர் வெள்ளையப்பன் வெட்டி படுகொலைசெய்யப்பட்டார். இந்நிலையில் சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொலைசெய்யப்பட்டு உள்ளார்.

இவர்கள் செய்த தவறு என்ன? சொத்துபிரசினையா? அல்லது நிலத்தை அபகரித்தார்களா? தேசத்துக்காக உழைத்தகாரணத்தால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து இந்து மததலைவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகிறார்கள். பாஜக எழுச்சியை தடுக்கவே இந்தகொலைகள் நடக்கிறது. நாளை தமிழகம் முழுவதும் பொது வேலைநிறுத்ததுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும். ஏற்கனவே 100க்கும் அதிகமானவர்களை இழந்துள்ளோம். இதில் குற்றவாளிகளை கண்டுபிடிக்ககோரி ஜனநாயக முறையில் மறியல் ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்கள் நடத்தியுள்ளோம். இதுவரை எந்தவழக்கிலும் உண்மையான குற்றவாளிகள் கைதுசெய்யப்படவில்லை.

அத்வானி மதுரைக்கு வந்தபோது பாலத்தில் நாட்டுவெடிகுண்டு வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து இந்து தலைவர்கள் மீது 10 தாக்குதல்சம்பவம் நடந்துள்ளன. 4 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் குற்றவாளிகள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. தேசபக்தி உள்ள தலைவர்களுக்கு பாதுகாப்பில்லை. சேலத்தில் கொலைசெய்யப்பட்ட ரமேஷ் நேர்மையானவர். அவருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்று தெரிந்தும் உரியபாதுகாப்பு அளிக்கப்படவில்லை. இந்து அமைப்புகளின் தலைவர்களுக்கு பாதுகாப்புவழங்க கோரியும், நடந்த கொலைகளில் குற்றவாளிகளை விரைவில் கைதுசெய்யக் கோரியும் விரைவில் முதல்வரை சந்தித்து மனுஅளிக்க உள்ளோம் என்றார் அவர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...