தமிழகம் மற்றும் தமிழர் நலனில் பாஜகவை யாரும் பிரித்து பார்க்க்கூடாது

அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது பாஜக மாநிலத்தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார். அதேபோல தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் கிடைக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப் பட்டுள்ள தாகவும் தெரிவித்தார்.

சேலத்தைசேர்ந்த ஆடிட்டர் ரமேஷ் பாஜக மாநில பொருளாளராக இருந்தார். அவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்யப் பட்டார். அவருக்கு 8-ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி சேலத்தில் திங்கள் கிழமை நடைபெற்றது. தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை கலந்துகொண்டு, ஆடிட்டர் ரமேஷ் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்டு 8 ஆண்டுகளாகியும் இதில்தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்காமல் இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக தடையாணை பெறப்பட்டுள்ளது. இந்த தடையாணையை நீக்கும்வகையில், மத்திய சட்டத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுக்க உள்ளேன்.

தடை நீக்கப் பட்டதும், வழக்கு விசாரணை நடைபெற்று குற்றவாளிகள் தண்டிக்கப் படுவர். வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் நாடுமுழுவதும் அனைத்து பொதுமக்களும் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இதனடிப்படையில் தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தடுப்பூசி வழங்குவதில் மத்தியஅரசு விரைவாக செயல்பட்டு வருகிறது.

தற்போது 66 கோடி தடுப்பூசி வாங்குவதற்காக ரூ.14 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகள் கிடைக்கும்சூழ்நிலை உருவாகும். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து 72 நாட்கள் ஆகிறது. மக்கள் மாற்றத்தை எதிர்நோக்கி புதியஆட்சிக்கு வாக்களித்துள்ளனர். புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு மீதான விமர்சனத்தை 6 மாதத்திற்கு பிறகே தெரிவிக்க முடியும். அதேசமயம் ஆட்சியாளர்கள் தவறு செய்தால் நிச்சயம் தட்டிக் கேட்போம்.

ஆட்சிக்கு வந்தவுடன் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நீட் தேர்வுக்கு தடை விதிப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த பிறகு நீட்தொடர்பாக மாறி மாறி கருத்து கூறி வருகின்றனர். நீட் தேர்வு நடைபெறாது என உறுதிகூறிய திமுக தற்போது மாறி, மாறி கூறுவது சரியல்ல. எங்களைப் பொறுத்தவரை நீட்தேர்வு யாருக்கும் எதிரானது இல்லை. நீட் தேர்வு காரணமாக, கடந்த 2020 ஆண்டு பாடத்திட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் கொண்டுவரப் பட்டுள்ளது.

மேலும் நீட் தேர்வினால் கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் மருத்துவம் பயிலும் வாய்ப்பு உருவாகியுள்ளது. தமிழகரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீடும் இதற்கு உதவியாக இருக்கும். பாஜகவை மதவாதசக்தி என குறிப்பிடுவது சரியல்ல. பாஜக ஆட்சிக்கு வந்தபின்னரே சச்சார் கமிட்டியின் பரிந்துரையின் படி, சிறுபான்மை மக்கள் அதிகமாக வசிக்கும் இடங்களை கண்டறிந்து அந்தப் பகுதியில் அவர்களுக்குத் தேவையான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணிதொடர்கிறது. இதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி தொடர்வதாக ஏற்கெனவே அறிவித்துள்ளனர். இதனடிப்படையில் நாங்கள் தொடர்ந்துபயணிப்போம். உள்ளாட்சித் தேர்தல் நிலைப்பாடு குறித்து தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் அகில இந்தியத்தலைமை இதுகுறித்து அறிவிக்கும்.

தமிழகத்தில் சித்தாந்த அடிப்படையில் பாஜக-திமுக இடையில்தான் போட்டி உள்ளது. திமுக எங்களுடைய சித்தாந்தங்களுக்கு எதிராகத்தான் கருத்துக் கூறி வருகின்றனர். திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய பல்வேறு கோரிக்கைகளை செயல்படுத்தாமல் உள்ளனர். பெட்ரோல், டீசலுக்கு விலைகுறைப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக இதுவரை அதை நிறைவேற்றவில்லை. இது நாணயமான அரசியல் இல்லை.

மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என்பது தமிழக பாஜகவின் நிலைப்பாடாகும். அணைகட்டப்பட்டால் மழை இல்லாத காலங்களில் தமிழகத்திற்கு தண்ணீர்கிடைக்க இயலாத நிலை ஏற்படும். இதை ஆரம்ப கட்டத்திலேயே தடுத்து நிறுத்தக்கோரி தில்லி சென்ற அனைத்துக் கட்சி குழுவிலும் நாங்கள் இடம் பெற்றுள்ளோம். தமிழகம் மற்றும் தமிழர் நலனில் பாஜகவை யாரும் பிரித்து பார்க்க்கூடாது என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...