தமிழக பா.ஜ.க., பொதுச்செயலர், சேலம் ஆடிட்டர் ரமேஷ் படுகொலையை கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்யக் கோரியும், தமிழகம் முழுவதும், மறியலில் ஈடுபட்ட பாஜக தலைவர்கள் உட்பட, 12000க்கும் மேற்பட்டோர், நேற்று கைதுசெய்யப்பட்டனர். அதேநேரத்தில்,
ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கை விசாரிக்க, அரசு அமைத்துள்ள, சிறப்புபுலனாய்வு குழு, தனது விசாரணையை துவங்கியுள்ளது. எனினும், முக்கியதுப்பு ஏதும் கிடைக்காததால், மர்மம் நீடித்து வருகிறது
பாஜகவுக்கு செல்வாக்கு உள்ள கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சில இடங்களில் நடத்தப்பட்ட கல் வீச்சில் பல அரசு பஸ்கள் சேதமடைந்தன.
இல.கணேசன், தமிழிசை கைது: சென்னை சைதாப் பேட்டை மார்க்கெட் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட பாஜக மூத்த தலைவர் இல. கணேசன், மாநில IT பிரிவு தலைவர் பாலாஜி . மாவட்டத் தலைவர் காளிதாஸ் உள்பட 500-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். சென்னை பெரவள்ளூர் சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்ட பாஜக தேசியச் செயலாளர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், வி.எஸ்.ஜே. சீனிவாசன் உள்பட 600 பேர் கைதுசெய்யப்பட்டனர். தேனாம்பேட்டை ஆலையம்மன் கோவில் அருகே மறியலில் ஈடுபட்ட மாநிலச் செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட 400க்கும் அதிகமானோர் கைதாகினர் ,
சென்னையில் 34 இடங்களில் மறியல்: கோயம்பேடு, எம்.ஜி.ஆர். நகர், வேளச்சேரி, ராயபுரம், ஆர்.கே. நகர், திருவிக நகர், பெரம்பூர், வில்லிவாக்கம், துறைமுகம், எழும்பூர், திருவல்லிக்கேணி, ஆயிரம்விளக்கு உள்பட 34 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட 88 பெண்கள் உள்பட 2000 க்கும் அதிகமான பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். பெரவள்ளூர், மாதவரம், திருவல்லிக்கேணி, வேப்பேரி, மடிப்பாக்கம் ஆகி இடங்களில் அரசு பஸ்கள் கல் வீசி தாக்கப்பட்டன.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: முழு அடைப்பு காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பல பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தன. பஸ்களும் இயக்கப்படவில்லை. மாவட்டம் முழுவதும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. இதனால் மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பல இடங்களில் கல்வீச்சினால் அரசு பஸ்கள் சேதமடைந்தன.
மன்னார்குடியில் பாஜக மாநில செயலாளர் கருப்பு தலைமையில் 200 க்கும் அதிகமானோர் கைதாகினர். முத்துபெட்டையில் 300க்கும் அதிகமான கடைகள் அடைக்கபட்டிருந்தன,
பரமக்குடியில் பாஜக மாநில இளைஞர் அணி தலைவர் பொன் பாலகணபதி 130 நபர்களுடன் கைதானார்
சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ... |
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.