மத்தியில் பா.ஜ.க தலைமையிலான ஆட்சியமைந்தால் அமெரிக்காவுடனான உறவுமேம்படும் . பாஜக முன்வைக்கும் நல்லாட்சிக்கும், காங்கிரஸ் நடத்தி வரும் தவறான ஆட்சிக்கும் இடையேயானபோட்டியாக அடுத்ததேர்தல் இருக்கும் என தேசியத் தலைவர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.
வாஷிங்டனில் நடைபெற்ற கூட்டமொன்றில் ராஜ்நாத்சிங் மேலும் பேசியதாவது:÷””இந்தியாவுடனான உறவை வர்த்தகபரிவர்த்தனை ரீதியாக மட்டும் பார்க்காமல், நீண்டகால கூட்டாளி என்ற அடிப்படையில் அமெரிக்கா பார்க்கவேண்டும். பொருளாதார விவகாரங்களிலும், குடியேற்ற சீர்திருத்தமசோதா தொடர்பாகவும் இந்தியாவின் கவலையை அமெரிக்கா புரிந்துகொள்ள வேண்டும். இவை இந்திய மனிதவளத்துறையில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்த கூடியது’ என்றார்.
இந்தியாவில் பொருளாதார நிலை மிகமோசமாக இருப்பதை கூட்டத்தில் பங்கேற்றோர் சுட்டிக்காட்டினர். நிலைமையை மேம்படுத்த பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளபடும்’ என உறுதியளித்தார்.
பாஜக முன்வைக்கும் நல்லாட்சிக்கும், காங்கிரஸ் நடத்தி வரும் தவறான ஆட்சிக்கும் இடையேயானபோட்டியாக அடுத்ததேர்தல் இருக்கும். வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியின் போது நல்லாட்சியை அளித்தோம். இப்போது பா.ஜ.க ஆட்சி நடைபெறும் மாநிலங்களிலும் நல்லாட்சியே நடைபெற்றுவருகிறது” என்றார்.
இந்நிகழ்ச்சியில் பாஜக பொதுச் செயலாளர் அனந்த்குமார், செய்தித்தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ... |
புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம். |
பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.