ஆடிட்டர் ரமேஷ் கொலைவிவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்

ஆடிட்டர் ரமேஷ் கொலைவிவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் பா.ஜ.க மாநிலப் பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொலைவிவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் என்று பாஜக தெரிவித்துள்ளது.

சேலத்தில் கடந்த 19ஆம்தேதி ஆடிட்டர் வி.ரமேஷ் கொலைசெய்யப்பட்டார். இந்நிலையில், தமிழகத்தில் அண்மையில் நடைபெற்றுள்ள பா.ஜ.க, இந்து அமைப்பினரின் கொலைகள்குறித்து விசாரிப்பதற்காக பா.ஜ.க சார்பில் குழு அமைக்கப்பட்டது.

பாஜக.,வின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் , நிர்மலா சீதாராமன், மக்களவை உறுப்பினர் ஆனந்த்ஹெக்டே ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழுவினர் சேலம் மரவனேரியில் உள்ள ஆடிட்டர் ரமேஷின் வீட்டுக்கு வியாழக் கிழமை வந்தனர். ரமேஷின் உருவப்படத்துக்கு அஞ்சலிசெலுத்திய மூவரும், அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினர். பிறகு , ரமேஷ் கொலைசெய்யப்பட்ட இடத்தை அவர்கள் பார்வையிட்டனர்.

தொடர்ந்து, தற்கொலைசெய்த பா.ஜ.க பெண் நிர்வாகி ராஜராஜேஸ் வரியின் வீட்டுக்கு சென்ற குழுவினர், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல்கூறினர்.

இதைதொடர்ந்து , மரவனேரியில் உள்ள ஆர்எஸ்எஸ். அலுவலகத்தில் பா.ஜ.க, ஆர்எஸ்எஸ். நிர்வாகிகளுடன் மூவரும் ஆலோசனைநடத்தினர்.

முன்னதாக, பிரகாஷ் ஜவடேகர் சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: ஆடிட்டர் ரமேஷின் கொலை பாஜக தலைவர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இது போன்ற தாக்குதல்களில் பாதிக்கப் பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்தும், விசாரணை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தியபிறகும் அது குறித்த அறிக்கையை பா.ஜ.க மேலிடத்துக்கு வழங்குவோம். குழுவின் அறிக்கை வருகிற 29-ஆம் தேதி சமர்ப்பிக்கப் படும். மேலும், இந்தவிவகாரத்தை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எழுப்புவோம் என்றார் அவர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...