பாரதீய ஜனதாவின் வளர்ச்சியால் தான் தலைவர்கள் கொல்லப்படுகிறார்கள்

பாரதீய ஜனதாவின் வளர்ச்சியால் தான் தலைவர்கள் கொல்லப்படுகிறார்கள் சிறுபான்மை மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித் தொகை வழங்குவது போன்று ஏழை இந்துமாணவர்களுக்கும் வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி பாஜக சார்பில் ஜூலை மாதத்தில் போராட்டம் நடந்துவருகிறது. இந்த ஆண்டுக்கான ஜூலை போராட்டம் பாஜக இளைஞரணி சார்பில் நாகர்கோவிலில் நேற்று நடைபெற்றது , இதில் 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தில் மாநில பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் கடந்த 9 மாதங்களில் இந்துஇயக்க தலைவர்கள் 6பேர் கொலை செய்யப்பட்டு ள்ளனர். 19 தாக்குதல்கள் நடந்துள்ளன. இப்படி தொடர் சம்பவங்கள் நடப்பதற்கு தமிழ்நாட்டில் பயங்கரவாதிகள் சர்வ சாதாரணமாக உலவிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதுதான் காரணம்.

தமிழகத்தில் பயங்கரவாதிகள் சுதந்திரமாக உலாவருகின்றனர். ஆடிட்டர் ரமேஷ் கொலை சம்பவத்திற்கு காங்., தலைவர் ஞானதேசிகன் உட்பட பல அரசியல்தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 22ம் தேதி தமிழகம் முழுவதும் பாஜக ., சார்பில் நடந்த கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவுதந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துகொள்கிறோம். தமிழகத்தில் கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவுகிடைக்குமா, என வைகோ கேட்டார். ஆனால் அவரே போராட்டத்தைகண்டு ஆச்சரியபட்டார்.

இந்துஇயக்க தலைவர்கள் தனிப்பட்ட விஷயங்களுக்காக கொல்லப்பட்டதாக டிஜிபி. அறிக்கை வெளியிட்டுள்ளார். டிஜிபி. அறிக்கையை பாஜக ஏற்றுக்கொள்ளாது. இந்த அறிக்கையால் பயங்கரவாதிகள் மேலும் பலசெயல்களை செய்ய வாய்ப்புள்ளது.

பயங்கரவாதிகள் பாஜக .,வை குறிவைக்க காரணம், தமிழ்நாட்டில் பா.ஜ.க கிள்ளுக் கீரையாக இல்லை என்பதால்தான். பாரதீய ஜனதாவின் வளர்ச்சியால் தான் தலைவர்கள் கொல்லப்படுகிறார்கள். இப்படி கொலைசெய்தால் பாரதீய ஜனதாவினரும் ஆயுதம் ஏந்துவார்கள். அப்படிநடந்தால் பாஜக பயங்கரவாத இயக்கம் என்று மக்கள் மத்தியில் ஆக்கிவிடலாம் என்று கனவுகாண்கிறார்கள்.

பொன்.ராதாகிருஷ்ணன் வெட்டிக் கொல்லப் பட்டாலும் தமிழ்நாட்டில் பாஜக கோலோச்சும் வகையில் கட்சியினர் பணியாற்ற வேண்டும். பாஜக ஆட்சி அமைக்காமல் ஓயமாட்டோம். அடுத்த 6 மாதத்தில் கட்சி வளர்ச்சியை 15 சதவீதமாக உயர்த்திக்காட்ட தீர்மானித்துள்ளோம்.

பாராளுமன்ற தேர்தலில் பாஜக வெல்வதும், நரேந்திரமோடி பிரதமர் ஆவது உறுதி. நமது ஆட்சிவரும் போது நமது மாணவ-மாணவிகளுக்கும் உதவித்தொகை கிடைக்கும் என பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...