ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்ட சம்பவம், பா.ஜ.,வுக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்,” என்று , பா.ஜ.க., மூத்த தலைவர் அத்வானி கருத்து தெரிவித்துள்ளார்.
சேலம் இரும்பாலையில் அமைந்துள்ள சுற்றுலா மாளிகையில், சேலம்மாவட்ட, பா.ஜ.க., மாநகர் மற்றும் புறநகர்மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்றுகாலை நடந்தது. பா.ஜ.க, மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.
இந்த கூட்டத்தில், பா.ஜ.க , மூத்த தலைவர் அத்வானி கலந்து கொண்டு பேசியதாவது:
சேலத்தில், ஆடிட்டர் ரமேஷ் படுகொலைசெய்யப்பட்ட சம்பவம், சேலம் மக்களிடையே மிகுந்தவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நான் ஆடிட்டர் ரமேஷ் வீட்டுக்கு செல்லும்போது, சாலையில் இருபுறத்திலும் நின்ற மக்களை பார்த்தேன். அப்போது அவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் இருப்பதை கண்டேன்.
சாதாரணமான நேரத்தில் நான் வரும்போது என்னை பார்த்து மக்கள் உற்சாகமாக கையசைத்து, அத்வானிஜி என கூப்பிடுவர். முகம் சந்தோஷத்துடன் காணப்படும். ஆனால், இன்று அந்தநிலையை காண முடியவில்லை.
ஆடிட்டர் ரமேஷ் கொல்லப்பட்டசம்பவம் நமக்கு விடப்பட்டுள்ள சவால். இந்தசவாலை தைரியத்துடன் ஏற்றுக்கொண்டு, கட்சி வளர்ச்சிக்காக நிர்வாகிகள் பாடுபடவேண்டும். ஒவ்வொருவரும் கட்சியை வளர்ப்பதற்கு அர்ப்பணிப்புணர்வுடன் கொண்டுசெல்ல வேண்டும்.
ஆடிட்டர் ரமேஷ் கொலைசெய்யப்பட்ட சம்பவம், பத்திரிகைகள் மூலம் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதற்காக பத்திரிகைகளுக்கு நன்றிதெரிவிக்கிறேன். சில மாதங்களில், லோக்சபாதேர்தல் வரப்போகிறது. அதற்குள் தமிழகத்தில், பா.ஜ.க., வை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டுசெல்வதில் நிர்வாகிகள் அக்கரை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் பேசினார்.
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.