விவாதத்துக்கு எடுத்துக்கொண்டால்தான் முக்கிய மசோதாக்கள் நிறைவேற ஒத்துழைப்போம்

 விவாதத்துக்கு எடுத்துக்கொண்டால்தான்  முக்கிய மசோதாக்கள் நிறைவேற ஒத்துழைப்போம் மழைக்காலக் கூட்டத் தொடரில் முக்கியமசோதாக்களை அரசு நிறைவேற்றுவதற்கு எதிர்க்கட்சியான பா.ஜ.க நிபந்தனை விதித்துள்ளது. உணவுப்பாதுகாப்பு மசோதா மற்றும் தெலங்கானா விவகாரங்களை விவாதத்துக்கு எடுத்துக்கொண்டால்தான் அரசின் முக்கிய மசோதாக்கள் நிறைவேற ஒத்துழைப்போம் என பாஜக தெரிவித்துள்ளது.

பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்குகிறது. வரும் 30ஆம் தேதிவரை நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தொடரில், விவாதிக்கவேண்டிய விவகாரங்கள் குறித்து தில்லியில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

பா.ஜ.க மூத்த தலைவர் எல்கே.அத்வானி இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மக்களவை எதிர்க் கட்சி தலைவர் சுஷ்மாஸ்வராஜ், துணைத் தலைவர் ரவிசங்கர்பிரசாத், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண்ஜேட்லி, சிவசேனை தலைவர் சஞ்சய்ரௌத், சிரோமணி அகாலிதளம் தலைவர் சுக்தேவ்சிங் திண்ட்ஸா உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இதுதொடர்பாக பின்னர் செய்தியாளர்களிடம் ரவிசங்கர்பிரசாத் கூறியதாவது:

உணவு பாதுகாப்பு அவசரச்சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் முன்பு அதில் சில திருத்தங்களை மேற்கொள்ளும்படி மத்திய அரசை வலியுறுத்த முடிவுசெய்யப்பட்டது. தற்போதைய அவசரச்சட்டத்தில் ஏராளமான குளறுபடிகள் உள்ளன. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இச்சட்டம் நம்நாட்டுக்கு அவசியம் என்பதில் கருத்துவேறுபாடு இல்லை.

ஆனால், இந்த சட்டம் தற்போதைய நிலையில் அமலுக்குவந்தால் தற்போது நடைமுறையில் உள்ள பொதுவிநியோக திட்டத்தின் நிலை என்னவாகும் என்பதற்கு திருப்தி அளிக்கக்கூடிய பதிலை மத்திய அரசால் வழங்க இயலவில்லை. உணவுப் பாதுகாப்பு சட்டத்தால் விவசாயிகளின் நலன்கள் எவ்வாறு பாதுகாக்கப்படும் என்பதை மத்திய அரசு இதுவரை தெளிவுபடுத்த வில்லை. இவை குறித்து பிரச்னை எழுப்ப தேசியஜனநாயகக் கூட்டணி முடிவுசெய்துள்ளது.

அரசுக்கு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மேற்கொள்ளவேண்டிய சட்ட அலுவல்கள் ஏராளமாக உள்ளன. இத்தொடரில் 5 அவசரச்சட்டங்கள் மற்றும் 44 மசோதாக்களை நிறைவேற்ற அரசுவிரும்புகிறது. அரசுக்கு இது முக்கியம் என்றால், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளில் தெளிவுஏற்படுவது எதிர்க்கட்சிகளுக்கு முக்கியம். உணவுப்பாதுகாப்பு மசோதா மற்றும் தெலங்கானா விவகாரங்களை விவாதத்துக்கு எடுத்துக் கொண்டால் தான் அரசின் முக்கிய மசோதாக்கள் நிறைவேற ஒத்துழைப்போம் என்றார் ரவிசங்கர்பிரசாத்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...