பயங்கரவாதத்தில் ஈடுபடுவோரை தங்கள் சாதி, மத அமைப்புகளிலிருந்து நீக்கி துணிச்சலான முடி எடுக்க வேண்டும்

 பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை தங்கள் சாதி, மத அமைப்புகளிலிருந்து நீக்கிவிட்டோம் என்ற துணிச்சலான முடிவுக்கு வரவேண்டும் என பாஜக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்ததாவது;

“தமிழகத்தில் உள்ள அப்பாவி முஸ்லீம்களை விசாரணை என்றபெயரில் அழைத்து துன்புறுத்துவதை தடுக்கவேண்டும்” என்று உள்துறை செயலாளரிடம் முஸ்லீம் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குற்றசம்பவத்தின் புகார் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் ஒவ்வொரு நபரும் ஒரு குறிப்பிட்ட சாதி , மதத்தைச் சார்ந்திருப்பவர்களாகத்தான் இருக்க முடியும். எனவே குற்றவாளிகளுக்கு சாதி மற்றும் மதசாயம் பூசி புலன் விசாரணைக்கு முட்டுக்கட்டை கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாக பெங்களுரு குண்டுவெடிப்பு சம்பவம், வேலூரில் வெள்ளையப்பன், சேலத்தில் ஆடிட்டர் ஏ. ரமேஷ் படுகொலை போன்ற குற்றவழக்குகளில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர்களை போலீசார் விசாரிக்க ஆரம்பிக்கும் முன்பே குற்றவாளிகளுக்கு தனிமத அடையாளத்தைக் கொடுத்து ஒரு குறிப்பிட்ட மதம் பாதிக்கப்படுகிறது என்று குரல்எழுப்புவது உண்மையான குற்றவாளிகள் தப்புவதற்கு உதவியாக அமைந்துவிடும்.

குற்றச் செயல்களில் ஈடுபடும் தீவிரவாத சக்திகளை கண்டுபிடிக்க அரசு மற்றும் காவல் துறைக்கு துணையாக அனைத்து மத அமைப்புகளும் முழு ஆதரவுகொடுத்து பயங்கரவாதத்திற்கு எதிராக கண்டன அறிக்கைகள் கொடுப்பதோடு, பயங்கர வாதிகளை அடையாளம் காட்ட நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று அனைத்து மத தலைவர்களும் தாங்களாக முன்வந்து காவல் துறைக்கு துணையாக நிற்பதை தங்கள் கடமை என்று உணரவேண்டும். எந்த மதத்தைச் சேர்ந்த அப்பாவி மனிதனும் துன்புறுத்தப்படுவதை பாரதிய ஜனதா கட்சி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. கொலையாளிகளையும், குற்றவாளிகளையும் விட்டுவிட்டு அப்பாவி மக்களை கைதுசெய்வது மேலும் அதிக கொலை நடப்பதற்கு உறுதுணையாக அமையும் என்பதை பாஜகட நன்கு உணர்ந்துள்ளது.

எனவேதான் பல வழக்குகளில் உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதை பாரதிய ஜனதா கட்சி தெளிவாக கூறி வருகிறது. ஆகவே அனைத்து சாதி, மதங்களைச் சேர்ந்தவர்களும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை தங்கள் சாதி, மதங்களிலிருந்து நீக்கிவிட்டோம் என்கின்ற துணிச்சலான முடிவை எடுப்பதற்கு முன்வருவதோடு, தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் பயங்கரவாதத்தை ஒழிக்க தாங்கள் துணையாக நிற்போம் என்று உறுதியாகக் கூற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று பாஜக மாநிலத் தலைவர் பொன். இராதாகிருஷ்ணன் அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...