கிஷ்த்வார் சம்பவத்தை ஜம்முகாஷ்மீர் மாநில அரசு, அரசியலாக்குகிறது என்று பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது; வகுப்புமோதல் சம்பவத்தின் மூலம் ஒமர்அப்துல்லா தலைமையிலான அரசு, தவறான அரசியல் நடத்துகிறது. இந்த சம்பவத்தில் பிரிவினை வாதிகள் ஈடுபட்டுள்ளனர். இது, மக்களை பிளவு படுத்துவதற்கான பாகிஸ்தானின் மற்றொரு சதித்திட்டம்.
கிஷ்த்வாரில் உள்ளவர்களின் வீடுகள் , கடைகள் தாக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியில் பாகிஸ்தான் தேசியக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆனால், அரசு உண்மையை மறைக்கப்பார்க்கிறது.
பிரிவினை வாதிகளை கட்டுப்படுத்த மாநில அரசு தவறி விட்டது. சம்பவம் நிகழ்ந்த கிஷ்த்வார் மாவட்டத்துக்கு ஞாயிற்றுக் கிழமை செல்ல முயன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சித்தலைவர் அருண்ஜேட்லியை மாநில அரசு அனுமதித்திருக்க வேண்டும். வகுப்புமோதல் சம்பவம் குறித்து விரைவாகவும் நேர்மையாகவும் விசாரணையை நடத்தவேண்டும் என்றும் பிரகாஷ்ஜவடேகர் தெரிவித்தார்.
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது எலும்பு மஜ்ஜை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.