வெங்காயத்தின் கடும் விலைஉயர்வால் கடும் அதிருப்தியடைந்துள்ள மக்களை தங்கள்பக்கம் இழுக்கும் நோக்கில், ஒருகிலோ வெங்காயம் ரூ. 25க்கு விற்க பாஜக ஏற்பாடு செய்துள்ளது.
டெல்லியில் வெங்காயத்தின் விலை கிலோ ரூ 80க்கு மேல் உயர்ந்துள்ளது. மக்களின் அன்றாடசமையலில் வெங்காயமும் தக்காளியும் முக்கிய இடம்பெற்றுள்ளது. வெங்காயவிலை உயர்வால் மக்கள் கடும் அதிருப்தி யடைந்துள்ளனர். இதையடுத்து, மக்களின் துயர் துடைக்க ஒரு கிலோ வெங்காயம் ரூ 25க்கு விற்க பாஜக நடவடிக்கை எடுத்துள்ளது.
டெல்லி மாநில பாஜக . தலைவர் விஜய்கோயல் கூறியதாவது:வெங்காயம் மட்டுமின்றி எல்லா காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. இதை கட்டுப்படுத்த மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பதுக்கல்பேர்வழிகள் மீது நடவடிக்கை எடுக்க தவறியதற்காக உணவுஅமைச்சர் ஹாருன் யூசுப்பை முதல்வர் டிஸ்மிஸ் செய்யவேண்டும். வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிவிட்டு, இப்போது தனது கையாலாகா தனத்தை வெளிபடுத்துகிறது. வெங்காயத்தில் மட்டும் இன்றி எல்லா பிரச்னைகளிலும் முதல்வர் ஷீலாதீட்சித் இந்தபோக்கைதான் கடைபிடிக்கிறார். விலை உயர்வு, மின்கட்டணம், குடிநீர்பற்றாகுறை, அங்கீகாரமற்ற குடியிருப்புகளில் வளர்ச்சியின்மை, பெண்களுக்கு பாதுகாப்பின்மை உட்பட எல்லா பிரச்னைகளிலும் தனதுகையாலாகாத தனத்தைதான் முதல்வர் வெளிபடுத்திவருகிறார். வெங்காய விலைஉயர்வால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளதை தடுக்க கிலோ 50க்கு வெங்காய விற்பனை என்று அரசு அறிவித்துள்ளது.
ஆனால், அங்கு அழுகிய வெங்காயங்கள் தான் விற்கப்படுகின்றன. இதை சமையலுக்கு பயன்படுத்தமுடியாது. அதனால் தான் பா.ஜ.க., சார்பில் வெங்காயம் கிலோ ரூ 25க்கு விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.விலை வாசியை கட்டுப்படுத்துவது அரசின்கடமை. ஆனால் இன்று எல்லா பொருட்களின் விலையும் விண்ணைமுட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. வெங்காய உற்பத்தி சற்றுகுறைந்துள்ளது. ஆனால், இதை முன்கூட்டியே அரசு அறிந்து, சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பதுக்கல்பேர்வழிகள் பயன்படுத்தி கொள்ளவிடாமல் தடுத்திருக்கவேண்டும்.டெல்லியில் உள்ள மொத்தகொள்முதல் மார்கெட்களை அரசுதான் நிர்வகிக்கிறது. மத்திய மற்றும் மாநில காங்கிரஸ் அரசுகளின் திறமையின்மையால் ஏழை மற்றும் நடுத்தரமக்கள் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளனர் என்று விஜய் கோயல் கூறினார்.
முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ... |
உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ... |
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.