தமிழரை மோசமாக சித்தரிக்கும் மெட்ராஸ்கபேயை மும்பையிலும் திரையிடக்கூடாது என்று பாஜக எதிர்ப்புதெரிவித்துள்ளது. விடுதலைப்புலிகளை தீவிரவாதிகளாகவும் தமிழரை மோசமான வர்களாகவும் சித்தரிக்கும் ‘மெட்ராஸ்கபே’ திரைப்படத்தை வெளியிடக் கூடாது என தமிழக கட்சிகளைசேர்ந்தவர்கள் தடை கோரியுள்ளனர்.
தமிழரை மோசமாகசித்தரிக்கும் மெட்ராஸ் கபேயை மும்பையிலும் திரையிடக்கூடாது – இந்தப்படம் வெளியாகும் அரங்குகளை முற்றுகையிட போவதாகவும் பா.ஜ.க அறிவித்துள்ளது. இதுகுறித்து மும்பை பாஜக தலைவர் அஷிஷ் ஷெலார் கூறுகையில், “ஜான்ஆபிரகாம் கதாநாயகனாக நடித்துள்ள ‘மெட்ராஸ் கபே’ திரைப்படத்தில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை தீவிரவாதியாக சித்தரித்து காட்டப் பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டதை இந்தபடம் காட்டுகிறது. மேலும் தீவிரவாதசெயல்களுக்கு தமிழ் அமைப்புகள் உதவியதாக காட்டப்படுகிறது.
தமிழரை மோசமாகசித்தரிக்கும் மெட்ராஸ்கபேயை மும்பையிலும் திரையிடக்கூடாது – பாஜக இந்தபடத்தை இந்தியாவில் வெளியிட தடைகோரி தமிழ் அமைப்புகள் எதிர்ப்புதெரிவித்து இருக்கின்றன. நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பையில் ஏராளமான தமிழ்சகோதரர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் நிறைய அமைப்பினர் எங்களிடம் இந்த திரைப்படத்தை வெளியிட எதிர்ப்புதெரிவித்து விளக்கியுள்ளனர். எனவே, ‘மெட்ராஸ்கபே’ திரைப்படம் மும்பையில் திரையிடப் படுமானால், சமுதாயத்தில் முரண்பாட்டை உருவாக்கும் என அறியப்படுகிறது. மாநில அரசு இந்த படம் திரையிடுவதை தடுக்கா விட்டால், தியேட்டர்களில் பாஜக.,வினர் போராட்டம் நடத்துவார்கள்,” என்று குற்றிப்பிட்டுள்ளார்.
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.