நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலைக்கு, பிரதமர் மன்மோகன்சிங் தார்மீக பொறுப்பு ஏற்று பதவி விலகவேண்டும் என, பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க .,வின் மூத்த தலைவர் வெங்கையாநாயுடு செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு முற்றிலும் செயலிழந்து முடங்கிபோய் இருக்கிறது. காங்கிரசின் தவறான பொருளாதார கொள்கையால் இந்தியாவில் விவசாயம், தொழிற் துறை உள்பட அனைத்து துறைகளும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது . நாட்டில் நிலவும் பொருளாதார மந்த நிலைக்கு அஞ்சி வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவைவிட்டு வேகமாக வெளியேறுகின்றன.
இந்திய நிறுவனங்கள்கூட வெளியேறும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. 2003-04-ம் ஆண்டு மத்தியில் பாஜக. ஆட்சியில் இருந்து வெளியேறிய போது, நாட்டின் பண வீக்கம் 3.8 சதவீதமாகவும், ஒட்டுமொத்தவளர்ச்சி 8.06 சதவீதமாகவும் இருந்தது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தவறான பொருளாதாரகொள்கையால் நாட்டின் பண வீக்கம் 9 சதவீதத்திற்குமேல் அதிகரித்து உள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி 4.4 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த ஒரு ஆண்டில்மட்டும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 16 சதவீதம் அதிகரித்துள்ளது.
நாட்டின் பொருளாதார மந்த நிலைக்கு பிரதமர் மன்மோகன் சிங்கும், நிதிமந்திரி பா.சிதம்பரமும் அளிக்க கூடிய விளக்கங்கள் ஏற்று கொள்ளக்கூடியதாக இல்லை. எனவே நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சீர்கேட்டிற்கு பிரதமர் மன்மோகன் சிங் தார்மீக பொறுப்பு ஏற்று பதவி விலகவேண்டும்.
பெட்ரோல்-டீசல்விலை மீண்டும் உயர்ந்து மக்களுக்கு மேலும் ஒருசுமையை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பெட்ரோலியதுறை மந்திரி வீரப்ப மொய்லி மக்களுக்கு சுமையை ஏற்படுத்தாதவாறு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையினால் நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் விரைவில் தேர்தல்நடைபெற உள்ள மிசோரம், டெல்லி, மபி., சத்தீஷ்கர், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்முடிவில் எதிரொலிக்கும். ஈழ தமிழர்கள், தமிழக மீனவர்கள் பிரச்சினையில் தமிழர்களின் உணர்வுகளுக்கு இலங்கை அரசு மதிப்பளிக்கவேண்டும்.
தமிழகத்தில் உணவுபாதுகாப்பு மசோதா சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் சூழ்நிலையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள உணவுபாதுகாப்பு மசோதா தமிழக அரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இது தொடர்பாக பாராளுமன்றத்தில் குரல்கொடுப்பேன் என்றார்.
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது எலும்பு மஜ்ஜை ... |
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.