இலங்கை கடற்படையினரால் தமிழகமீனவர்கள் சந்தித்து வரும் பிரச்னையை நாடாளுமன்றத்தில் பாஜக எழுப்பும் என அவரை சந்தித்த பாம்பன் மீனவர்களிடம் மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதியளித்துள்ளார்.
பாம்பன் பகுதியிலும் இலங்கை கடற் படையினர் மேற்கொண்டு வரும் அட்டூழியத்தை எடுத்துரைக்க பாம்பன்பகுதியை சேர்ந்த தீவுமீனவர்கள் சங்கத்தின் ஆலோசகர் சைமன், முன்னோர்கள் நினைவு மீனவர்கள் சங்க செயலர் வில்சன், பாம்பன் மீனவர்கள் சங்கத்தின் தலைவர் சிப்பிசேசு, பாம்பன் பஞ்சாயத்து தலைவர் பேட்ரிக், பா.ஜ.க தேசிய பொதுக்குழு உறுப்பினர் முரளி தரன், தமிழக பா.ஜ.க செயலர் ஆதவன் உள்ளிட்டோர் மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜை நாடாளுமன்ற வளாகத்தில் செவ்வாய்க் கிழமை சந்சித்துப் பேசினர்.
இந்த சந்திப்புக்குப்பிறகு செய்தியாளர்களிடம் பேட்ரிக் கூறியது: பாம்பன் பகுதி மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்குச்சென்று மீன்பிடிப்பது அரிது. அவர்கள் இந்திய எல்லைக்குள் தான் மீன்பிடித்து வருகின்றனர். அவர்களை இலங்கை கடற் படையினர் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி பிடித்துச்சென்றனர்.
கடந்த 50 ஆண்டுகளாக இதுபோன்ற சம்பவம் நடைபெறவில்லை. தற்போது ராமேசுவரம் போல் பாம்பன்பகுதியிலும் இலங்கை கடற் படையினரின் அட்டூழியம் தொடங்கியுள்ளது.
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமேசுவரம், காரைக்கால் பகுதிகளைச்சேர்ந்த 146 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என சுஷ்மா ஸ்வராஜிடம் வலியுறுத்தினோம்.
இந்த விவகாரம்தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷிதிடம் கொண்டு செல்வதாகவும், நாடாளுமன்றத்தில் இந்தவிவகாரத்தை எழுப்புவதாகவும் அவர் எங்களிடம் உறுதியளித்தார் என பேட்ரிக் கூறினார்.
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.