உத்தரகாண்ட் மாநிலத்தைச்சேர்ந்த பாஜக எம்.பி. தருண்விஜய். பாராளுமன்றத்தில் பேசுகையில் தமிழ்மொழிக்கு புகழாரம் சூட்டியுள்ளார் .
இதுபற்றி அவர் கூறியதாவது:–
தமிழ்மொழி நாட்டிலேயே புராதனமான பழம்பெருமை வாய்ந்த மொழியாக திகழ்கிறது. 7 கடல்தாண்டி சிகரம் தொட்ட தமிழ் மொழியை வடஇந்தியர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். வட மாநிலங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளில் தமிழ்மொழி பற்றியபாடம் இடம் பெறவேண்டும் இதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கவேண்டும்.
தேசியளவில் தமிழ்மொழியை 2வது மொழியாக பயன் படுத்த முன்வரவேண்டும்.
அனைத்து பல்கலை கழகங்களிலும் தமிழ்பற்றிய பாடம் இடம்பெறவேண்டும். தமிழ் கற்க அரசு அதிகாரிகளுக்கு உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கவேண்டும்.
தமிழ் அறிஞர்கள் பலர் பழங் காலத்தில் கேதார்நாத் வந்துசென்று இருக்கிறார்கள். அவர்கள் வட நாட்டுக்கும், தென் நாட்டுக்கும் இடையே பாலமாக இருந்து இணைப்பு ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
வடஇந்தியர்கள் அணியும் தலைப் பாகை போல் மகாகவிபாரதியார் அணிந்து எடுத்துக்காட்டாக விளங்கினார். அவர் கலாசாரம் மற்றும் சமுதாயத்தில் பெரும் சீர்திருத்தங்களை உருவாக்கினர் .
ஒரு காலத்தில் தமிழ்நாடு இந்தி எதிர்ப்புகொள்கையை கடைப்பிடித்தது. இந்தியை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது. இந்தியை யாரும் திணிக்காமல் அவர்களாகவே கற்றுக் கொள்ள முன்வருகிறார்கள் என்று அவர் கூறினார்.
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது. |
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.