கேதார்நாத் கோயிலில் 86 நாட்களுக்குபிறகு நேற்று வழிபாடு தொடங்கியது. தலைமை பூசாரி கற்ப கிரகத்தை தொடங்கி சாமிக்கு வேதங்கள்முழங்க பூஜைகள்செய்தார். இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக தென்மேற்கு பருவமழை முன் கூட்டியே தொடங்கியது. மட்டும்மல்லாது பலத்த
மழையும்பெய்தது. வரலாறு காணாத அளவுக்கு மழைபெய்ததால் வெள்ளப்பெருக்கு நிலச்சரிவு ஏற்பட்டு சுமார் 2 லட்சம் பக்தர்கள் சிக்கிக் கொண்டனர்.
வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச் சரிவில் சிக்கி ஆயிரக்கணக்கனோர் பலியாகிவிட்டனர்.
கோயில்களுக்கு செல்லும்சாலைகள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்தது. கோயில்களுக்கு செல்லும்பாதைகள் செப்பனிடப்பட்டு வருகின்றன. கேதார்நாத் கோயிலுக்கு செல்லும் பாதைகளும் செப்பனிடும் பணி முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. கோயிலை சுற்றிலும் மண் சரிவு அகற்றப்பட்டு 86 நாட்களுக்குபிறகு நேற்றுக் காலையில் பூஜைதொடங்கியது.
நேற்றுக் காலையில் சுமார் 7 மணிக்கு தலைமை பூஜாரி ரவல்பீமா ஷங்கர் கோயிலின் கர்ப்பக்கிரக கதவை திறந்து உள்ளே சென்றார். அதன்பின்னர் வேதம் ஓத, வழிபாடுகள் நடந்தது. நேற்று இறைவனுக்கு வேண்டிய நாளாக இருந்ததால் பூஜைகள் தொடங்கப்பட்டன. பூஜையில் பத்ரிநாத் பூஜைரிகளும் ஊழியர்களும் கலந்துகொண்டனர்.
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |
பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.