13.09.2013 ஆம் நாள் இந்திய சரித்திரத்தில் ஒரு மிக முக்கியமான நாள்..டெல்லி மருத்துவ மாணவி பாலியல் கொலை வழக்கில் குற்றவாளிகள் நாலவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
.
தூக்குதண்டனையை ஒழிக்கவேண்டும் என நம்மூர் " ஞானப்பிரகாச அடிகளார்"–டாக்டர் கலைஞர் உள்ளிட்ட உலகத்தலைவர்கள், கோரிவரும் நிலையில், மீண்டும் தூக்கு தண்டனை இந்திய அரசியல் ஆட்டத்தில் "பேட்ஸ் மேன்" ஆக களம் இறங்கியுள்ளது.
தேசத்துக்கு குண்டுவைத்தவன், உளவு சொன்னவன், மதங்களை முட்டி மோதவிட்டு ரத்தம் குடித்தவனுக்கெல்லாம், 5 ஆண்டு, 10 ஆண்டு தண்டனை..அல்லது விடுதலை , என்று தீர்ப்பு கூறும், இந்திய நீதி மன்றங்கள், பாலியல் கொலை வழக்கில் தூக்கு தண்டனை கொடுத்தது அதிசயமே..
இந்த அதிசயம் எப்படி நடந்தது..?–நாடு முழுதும் லட்சக்கணக்கன, மாணவ, மாணவியர், இளஞர்கள், வீதிக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்..அதுவும் ஒருநாள் இருநாள் அல்ல..பலநாட்கள்..அரசு பயந்தது, மக்கள் கருத்து உருவானது..மக்கள் கருத்துக்கு பயந்த மதிப்பு கொடுத்த நீதிமன்றம், கொடுத்த தீர்ப்புத்தான் இந்த மரணதண்டனை..
அதேபோல் சரித்திர முக்யத்துவம் வாய்ந்த அறிவுப்பும் நேற்று வெளியாகியது..அதுவும் அயோக்கியர்களுக்கு கொடுத்த மரணதண்டனை போன்ற தீர்ப்புத்தான்..
நால்வருக்கு தூக்கு தீர்ப்பு —மரணமடைந்த மாணவியின் குடும்பத்தினருக்கு மட்டும் மகிழ்ச்சி தந்திருக்கும்..ஆனால் இந்த தீர்ப்பு நாட்டு மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியும், ஆறுதலையும் தரும்..
ஆம்..இரண்டாவது அறிவிப்பு நாட்டில் மலிந்து விட்ட ஊழலுக்கு விதித்த மரணதண்டனை..மதவாதத்தை சொல்லி நடத்தும் மலிவு அர்சியலுக்கு கிடைத்த மரணதண்டனை..குடும்ப அரசியலுக்கு, தேசபத்துக்காப்புக்கு எதிரானவருக்கு,ராணுவத்தை அவமதித்தவருக்கு, ஏழ்மைக்கு, வறுமைக்கு, வளர்ச்சியின்மைக்கு, எதிரான அறிவிக்கப்பட்ட மரணதண்டனை..
வெள்ளைக்கரானால் ஆரம்பிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் கடைசி வெள்ளைக்கார தலைவியின் கொடுங்கோல், கொள்ளைக்கார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தீர்ப்பு..
ஆம் 2014 ஆம் ஆண்டு, இந்தியாவை வழிநடத்த, உயர்த்த, இவரால்தான் முடியும்…இவரே நம் தேவ தூதர்..இவரே நம் நம்பிக்கை நட்சத்திரம்..இவரே நம் நிரூபிக்கப்பட்ட வெற்றியாளன்..என கோடான கோடி இந்திய இளைஞர்களாலே முடிவு செய்யப்பட்ட நரேந்திர மோடியை பாஜகவின், பிரதமர் வேட்பாளராக அறிவித்த தீர்ப்பு.
இது கட்சி எடுத்த முடிவு மட்டுமல்ல..மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த முடிவு…
ஆம்..நம்பிக்கை பிறந்து விட்டது..நாளைய இந்தியா நல்லவரின்..வல்லவரின்..கைய்யில் ஒப்படைக்கப்பட்டுவிட்டது..
இருக்கும் கவலைக்கெல்லாம்..கஷ்ட்டத்திற்கெல்லாம் இன்னும் 6 மாதம் மட்டுமே வாழ்வு…
நரேந்திர மோடியை பிரதமராக்க அல்லும் பகலும் உழைப்போம்..
அடுத்த பாரத பிரதமரை நேரில் கண்டு வாழ்த்த ..வணங்க திருச்சியில் 26 ந்தேதி கூடூவோம்….வாரீர்..வாரீர்..வாரீர்..
நன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல்
பாஜக மாநிலப் பொருளாளர்
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |
இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.