உபி.,யில் முசாபர்நகர் கலவரம் தொடர்பாக இன்று பாஜ., தேசியதலைவர் ராஜ்நாத் சிங் , ஜனாதிபதியை சந்தித்து கோரிக்கை மனுகொடுத்தார். பின்னர் அவர் கூறுகையில், உபி.,யில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
உ.பி.,யின் முசாபர்நகர் மாவட்டத்தில், சமீபத்தில், இருபிரிவினருக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில், 50பேர் பலியாகினர். 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் , கலவரம் காரணமாக, முகாம்களில் தஞ்சம்புகுந்துள்ளனர். மேலும் உபி.,யில் முசாபர்நகர் கலவரத்தினை தூண்டியதாக பொய் குற்றச்சாட்டினை கூறி பாஜக.,வை சேர்ந்த எம்எல்ஏ.,க்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் கலவரத்தை கண்டித்தும், எம்எல்ஏ.,க்கள் சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்தும், மேற்கு உத்தர பிரதேசத்தில் பாஜக , பந்த்திற்கு அழைப்புவிடுத்துள்ளது. பின்னர் தேசியதலைவர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து கோரி்க்கை மனுகொடுத்தார். அவருடன் வருண், உமா பாரதி உள்ளி்ட்ட உ.பி., மாநில பா.ஜ.க,வினர் கலந்துகொண்டனர். அந்த கோரிக்கையி்ல் கலவரத்தினை தடுக்கதவறிய அகிலேஷ்யாதவ் அரசை கலைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.