காங்கிரஸ் கட்சியினர் கட்டணம் விதித்து அதனை தங்கள்பாக்கெட்டுக்களில் திணித்து கொள்கிறார்கள். ஆனால் மற்றகட்சியினர் கட்டண தொகையை கட்சியின் வளர்ச்சிபணிக்களுக்காக வழங்குகிறார்கள் என்று பா.ஜ.க.,வின் முன்னணி தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.
நரேந்திரமோடி பங்கேற்கும் கூட்டங்களில் கலந்து கொள்பவர்களுக்கு கட்டணம்விதிக்கும் முறையை பா.ஜ.க நடைமுறைப்படுத்தியது. சுப்பிரமணிய சுவாமி இதற்கு ஆதரவுதெரிவித்து கூறியதாவது:–
இதில் என்ன தவறு இருக்கிறது? மக்கள் கட்டணம்செலுத்தி பங்கேற்க தயாராக உள்ளார்கள். யாரையும் நாங்கள் கட்டாய படுத்தவில்லை. மகாத்மாகாந்தியே இந்த முறையைதான் பின்பற்றினார். அவர் கையெழுத்திடுவதிற்கு ரூ.5 கட்டணம் விதித்தார். காங்கிரஸ் கட்சியினர் கட்டணங்கள்விதித்து அதனை தங்கள் பாக்கெட்டுக்களில் திணித்துகொள்கிறார்கள். ஆனால் மற்றகட்சியினர் கட்டணதொகையை கட்சியின் வளர்ச்சிபணிக்காக வழங்குகிறார்கள்.
மேலும் காங்கிரஸ் துணைதலைவர் ராகுல்காந்தி எங்கு சென்றாலும் நமது ஓட்டு இரட்டிப்பாகும். அவர் நாடுமுழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதே நம் எல்லோருடைய விருப்பமும் கூட என்றார்.
முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ... |
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ... |
Leave a Reply
You must be logged in to post a comment.