முசாஃபர் நகர் கலவரம்தொடர்பாக உ.பி மாநில அமைச்சர் ஆஸம்கான் மீது வழக்கு ஏதும் இல்லை என சமாஜவாதிகட்சி தெரிவித்து தனது ஒருதலை பட்சமான நிலைப்பாட்டை நிருபித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர் நகர் மற்றும் அதன் அண்டைமாவட்டங்களில் அண்மையில் நடந்தகலவரத்தில் 47 பேர் உயிரிழந்தனர். பல ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரணமுகாம்களில் தஞ்சம்புகுந்தனர்.
இந்தக் கலவரத்தை கட்டுப்படுத்துவதில் போலீஸாருக்கு “அரசியல்நிர்பந்தம்’ இருந்ததாக, ரகசிய ஒளிப்பதிவு நடத்திய தனியார் தொலைக் காட்சியில் செய்தி ஒளிபரப்பானது. அமைச்சர் ஆஸம்கான் தலையீட்டால் தங்கள்கைகள் கட்டப்பட்டிருந்ததாக, போலீஸ் அதிகாரிகள் சிலர் புகார் தெரிவித்திருந்தனர்.
மேலும் கலவரத்தின் போது ஆஸம்கானின் பேச்சு, வன்முறையை தூண்டும் விதத்தில் இருந்ததாகவும் புகார்கூறப்பட்டது.
ஆனால் ஆஸம்கான் மீது எந்த வழக்கையும் பதியாத உ.பி மாநில அரசு கலவரம் தொடர்பிருப்பதாக பொய் குற்றச்சாட்டை கூறி பா.ஜ.க எம்எல்ஏக்களை மட்டும் கைது செய்து தனது ஒருதலை பட்சமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது
உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ... |
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
Leave a Reply
You must be logged in to post a comment.