இந்தய பொருளாதார விஞ்ஞானிகள் மன்மோகனும் , சிதம்பரமும் எந்த லக்ஷணத்தில் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பது நாடறிந்த விஷயம்..வெங்காயம் முதல் அரிசி, பெட்ரோல், டீசல் வரை தஞ்சாவூர் கோபுரத்தை விட உயரத்தில் சென்று விட்டது. மக்களை பற்றி கவலை படுகின்ற உள்ள ஒரு தலைவரை ஏன் தேர்ந்து எடுக்க கூடாது??
மாநிலங்கள் இடையே உள்ள தண்ணீர் தீர்க முன் வராத இந்த மத்திய அரசு மோடியின் குஜராத் அரசு விவசாயிகளின் வயுற்றில் பாலை வார்த்த "நர்மதா நதி நீர் திட்டம் " ஒரு உதாரணம்.. இந்த நாட்டில் 20000 மெகவாட் மின்சாரம் பற்றாகுறை உள்ள நிலையில் ஆசியாவில் பெரிய சோலார் சிஸ்டம் முறையே அமுல் படுத்தி வருங்கால தலைமுறை மின் வெட்டு இல்லாமல் இருக்க வழி செய்யும் ஒரு தலைவனை ஏன் மோடியை தேர்ந்து எடுக்க கூடாது?
இந்தியாவை சுற்றி உள்ள கொசு போன்ற உள்ள நாடுகள் எல்லாம் நம்மை மதிக்காமலும், ஏளன பார்வைக்கும் உள்ளானது இந்த மத்திய அரசின் நிலை இல்லா படு கேவலமான வெளியுறவு கொள்கை.
ராணுவ வீரர்களின் தலை போனால் என்ன ? மக்களின் உயிர் போனால் என்ன என்று எதையும் பற்றியும் கலவை படாமல் இருக்கும் இந்த அரசு இருப்பதை விட தேச பக்தி உள்ள கட்சியின் பிரதம வேட்பாளர் மோடியை ஏன் மோடியை தேர்ந்து எடுக்க கூடாது?
ஊழலில் கொழுத்த ஒரு கட்சி. நிலக்கரி, 2ஜி , ஹெலிகாப்ட்டர், கம்மென்வெல்த், இஸ்ரோ ,ரயில்வே , என பட்டியல்குள் அடக்கமுடியாத ஊழல் செய்யும் முதலைகளை விரட்டி அடிக்க வேண்டாமா.அதற்கு ஏன் மோடியை தேர்ந்து எடுக்க கூடாது… கோத்தர சம்பவத்தை பேசுபவர்களுக்கு 1947-வங்காளத்தின் 5000, 1964-ரூர் கோலா 2000,1967-ராஞ்சி – 200, 1969 அகமதாபாத் 512, 1970-1985 பிவாந்தி 226, 1980-மொராதாபாத் 2000, 1983-அஸ்ஸாம் 5000, 1984 டெல்லி 2733, 1985 குஜராத் 300, 1986- அகமதாபாத் 59,1982 மீரட் 81, 1992-அலிகர் 176,1992 சூரத் 175 , 2002-மும்பை-கணக்கில்லாமல், UP இல் மல்லியனா , மீரட் , பகல்பூர் ஜாம்ஷெட்பூர் என நடைபெற்ற கலவரங்களில் DATABASE இது .. {(1979-ஜாம்ஷெட்பூர்-125 இது கம்யூனிஸ்ட் ஆட்சியில்)} இவை காங்கிரஸ் ஆண்ட மாநில வரலாறு.. மேற்கண்ட மத கலவரங்களை பற்றி ஊடகங்களும் , சமுக ஆர்வலகளும் பேச மறுப்பது ஏன்?
மோடிக்கு எதிராக பேசினால் மக்கள் நம்மை திரும்பி பார்ப்பார்கள் என தனியார் டிவி களின் நடக்கும் விவாத நிகழ்ச்சிகளில் சமுக ஆர்வலர் , எழுத்தாளர்களும் , மனித உரிமை என்று பேசுபவர்களுக்கு இதெல்லாம் கண்ணில் படாமல் போனது எப்படி?
யார் தவறு செயதாலும் நடுநிலையாக பேச வேண்டியவர்கள் ஒரு கட்சிக்கு சார்பாக பேசுவதும் , மைனரட்டிகள் தவறு செய்யும் போது மனித உரிமை பேசுவதும் இந்த நாட்டின் ஜனநாயகம்.
சுப்ரீம் கோர்ட் மோடிக்கு எதிரான குற்றசாட்டுகளுக்கு முகாதிரம் இல்லை என்ன சொன்ன பிறகும் இதை பற்றி பேசுவது கோர்ட் அவமதிப்பாக தெரிவில்லையா இவர்களுக்கு?
தேச பக்தி உள்ள, மக்களை பற்றி சிந்திக்கின்ற ஒரு தலைவன் கிடப்பது அரிது.ஏன் மோடியை தேர்ந்து எடுக்க கூடாது???
You must be logged in to post a comment.
தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ... |
மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ... |
3disappointed