நாட்டின் தற்போதையதேவை பொருளாதார மேதையல்ல; திறமையான பிரதமர்தான், பொருளாதார நிபுணராக இருந்த மன்மோகன்சிங், பிரதமராக இருக்கிறார். தற்போது தான் வரலாறுகாணாத பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. என்று பா.ஜ.க தேசியத் தலைவர் ராஜ்நாத்சிங் கூறினார்.
சர்வதேச தொழிலக கூட்டமைப்புசார்பில் கொல்கத்தாவில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று, ராஜ்நாத்சிங் கூறியதாவது:
பொருளாதார நிபுணராக இருந்த மன்மோகன்சிங், பிரதமராக இருக்கிறார். தற்போது தான் வரலாறுகாணாத பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பொருளாதாரமேதையல்ல. ஆனால், அவர் திறமையான பிரதமராக இருந்தார். நாட்டுக்கு பொருளாதாரமேதைகள் தேவையில்லை; திறமையான பிரதமர்தான் தேவை.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை விட்டுச் செல்லும் போது, அரசு கஜானா நிரம்பி இருந்தது. காங்கிரஸ் தலைமையிலான மத்தியஅரசு பின்பற்றிய தவறான பொருளாதார கொள்கைகளால், கஜானா காலியாகிவிட்டது. இதனால், நடப்புக் கணக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. பொருளாதாரவீழ்ச்சி ஏற்படுமென பாஜக மக்களவையிலும், மாநிலங்களவையிலும் குரல் கொடுத்தது. ஆனால், அந்த எச்சரிக்கைக்கு செவிமடுக்க மறுத்து விட்டது காங்கிரஸ். இதன்விளைவே ரூபாய் மதிப்புவீழ்ச்சி.
அதேநேரம் , அமெரிக்க டாலரின்மதிப்பு கூடிக்கொண்டே செல்கிறது. மத்திய அரசின் தவறான முடிவால், இந்திய முதலீட்டாளர்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்ய தொடங்கிவிட்டனர். தற்போதைய பொருளாதார வீழ்ச்சியை கட்டுப்படுத்தும் திறனை மத்தியஅரசு இழந்துவிட்டது. மத்திய ஆட்சியில் ஊழலும், முறைகேடும் அதிகரித்துவிட்டன. மக்கள், ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர். மக்கள்விரும்பும் ஆட்சியை தருவதற்கு பா.ஜ.க தயாராக உள்ளது.
பொருளாதார ரீதியில் நாடு வளர்ச்சிபெற, பொருளாதார சீர்திருத்த திட்டங்களை முன்னெடுக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அனைத்து பொருளாதார பிரச்னைகளுக்கும் தீர்வுகாணும் வகையில் திட்டங்களை பாஜக வகுத்துள்ளது. இத்திட்டங்கள் குறித்த அறிவிப்பு இருமாதங்களில் வெளியாகும்.
நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 74 சதவீதம்பேர் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர். எனவே, நகரப் பொருளாதாரத்தை காட்டிலும் கிராம பொருளாதாரத்தை மேம்படுத்துவதே சிறந்தவழி. கிராமம்சார்ந்த பொருளாதாரம்தான் நாட்டுக்கு உகந்தது என மகாத்மாகாந்தி கூறியுள்ளார் என்றார் ராஜ்நாத்சிங்.
பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ... |
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.