குஜராத் மிகச்சிறந்த வளர்ச்சியை பெற்றுள்ளது

 லோக்சபாதேர்தலில் காங்கிரஸை தோற்கடிக்க வேண்டும் என்று தெலுங்குதேசம் கட்சித்தலைவர் சந்திரபாபுநாயுடு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் குஜராத் மிகச்சிறந்த வளர்ச்சியை பெற்றுள்ளது என அம்மாநில முதல்வரும் பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியையும் சந்திரபாபு நாயுடு பாராட்டியுள்ளார்.

டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நரேந்திரமோடி, சந்திரபாபுநாயுடு ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் சந்திரபாபுநாயுடு பேசுகையில், ஆந்திர மாநில முதல்வராக இருந்தபோது ஹைதராபாத் மிகப்பெரும் வளர்ச்சியை பெற்றது. 2020ஆம் ஆண்டுக்கான இலக்கை நிர்ணயித்து செயல்பட்டோம்.

அப்போது கிளிண்டன், டோனிபிளேர் என வெளிநாட்டுத் தலைவர்கள் பலரும் ஹைதராபாத் வந்தனர். அன்று ஹைதராபாத் எப்படிஇருந்ததோ இப்போது அப்படி இருக்கிறது குஜராத்.

பா.ஜ.க தலைமையிலான தேசியஜனநாயகக் கூட்டணியில் வேலை வாய்ப்புகள் ஏராளமாக உருவாக்கப்பட்டன. ஆனால் காங்கிரஸ்கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் எந்த ஒரு வேலைவாய்ப்புமே உருவாக்கபடவில்லை.

விலைவாசி மிகக்கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் சாமானியமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு தோல்வியடைந்து விட்டது. டெல்லி மருத்துவ மாணவி விவகாரம் ஒன்றே அதற்குசாட்சி. உத்தர்காண்ட் வெள்ளத்தின்போது நானும் குஜராத் முதல்வர் மோடியும் அங்குசென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டோம். ஆனால் அம்மாநில அரசு சரியாக செயல் படவில்லை.

தண்டனைபெற்ற எம்பி.,எம்எல்ஏக்களைப் பாதுகாக்கும் விவகாரத்தில் ராகுல்காந்தி கருத்து தெரிவித்திருப்பதும் இன்று பிரதமரைபோய் சந்திப்பதும் திட்டமிட்ட நாடகமே

2014ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல்வருகிறது. இதுதான் நமக்கு கிடைத்திருக்கும் சந்தர்ப்பம். இந்தியா வல்லரசு ஆகும்நாள் வெகுதொலைவில் இல்லை.. நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்தியாவை வல்லர சாக்குவோம்.

வரும்தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தாவிட்டால் பாதிப்பு நமக்கு தான். அதனால் காங்கிரஸை வீழ்த்தவேண்டும் என்று அனைவருக்கும் அழைப்புவிடுக்கிறேன் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் நலன் குறித்து முதல்வர் ச ...

மக்கள் நலன் குறித்து முதல்வர் சிந்திப்பாரா ? அண்ணாமலை கேள்வி ''தனது கட்சியினரின் நலனை விட்டுவிட்டு, வாக்களித்த தமிழக மக்களின் ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்பட ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்த வேண்டும் – பெல்ஜியம் மன்னருடன் பிரதமர் மோடி பேச்சு வர்த்தகம், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து, பெல்ஜியம் ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இ ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை – அமித்ஷா '' இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை,'' என ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்ச ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்சங்கர் பதில் '' தமிழக மீனவர்கள் விவகாரத்தில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அண்ணாமலை நெகிழ்ச்சி ஏழு இஸ்லாமிய நாடுகள் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அர ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அரசு கர்நாடகாவில், நம்ம யாத்ரி என்ற தனியார் டாக்ஸி சேவை ...

மருத்துவ செய்திகள்

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...