இது தான் மோடி செய்த மாயம்

 மோடி வருகைக்கு பின் , தமிழகத்தில், பா.ஜ.க, என்ன முடிவெடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு, எல்லா கட்சிகளிடமும் காணப்படுகிறது . இது தான் மோடி செய்த மாயம் ' என்று தமிழக பா.ஜ.க , தலைமை மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் மோடி, 26ம் தேதி, திருச்சி இளந்தாமரை மாநாட்டில் பேசினார். எந்ததேசியத் தலைவருக்கும் இல்லாத விதத்தில், மோடி பேச்சைக்கேட்க, நான்கு லட்ச்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் திரண்டனர்.

இதுகுறித்து, தமிழக பாஜக ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: மாநாட்டுக்கு இரண்டுநாட்களுக்கு முன், ஆன்லைனில், 80 ஆயிரம்பேர் முன்பதிவு செய்துவிட்டனர். கட்டணம் செலுத்தி பதிவுசெய்தவர் மட்டும் ஒருலட்சம் பேர், அன்றைய மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். எந்தகட்சிக்கும் கிடைக்காத வெற்றி இது. மோடி வருகைக்கு பிறகு, தமிழகத்தில் பாஜக.,வுக்கு ஆதரவான அலை எழுந்துள்ளது.

ஐந்து மாநில சட்டசபைதேர்தல் முடிவுக்கு பிறகு, அந்த அலை பலமாகவீசும். இப்போதே, தமிழக அரசியலில் திடீர்மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. பாஜக.,வை சார்ந்து முடிவு எடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பெரியகட்சிகள் கூட, பாஜக ., என்ன முடிவு எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்க்கும் நிலை வந்துள்ளது. இது மோடி வருகையாலும், அவருக்கு தமிழகமக்கள் அளித்த ஆதரவாலும் ஏற்பட்ள்ள மாற்றம்.

இவ்வளவு பெரிய வெற்றிபெற்றுள்ள, இந்த மாநாட்டை நடத்துவதற்கு, நாங்கள் பெரும் சிரமப்பட்டோம். 12 நாட்களுக்கு முன்புதான் மைதானத்துக்கான அனுமதியை கொடுத்தனர். வெறும் காடாககிடந்த அந்த இடத்தை, 10 நாளில், நாங்கள் சீர்படுத்தினோம். ஆனால், அநியாய வாடகைகேட்டனர். மத்திய அமைச்சர்வரை பேசி அனுமதிபெற்ற பிறகும், உடனடியாக மைதானத்தை எங்களிடம் தரவிடாதவாறு, அரசியல் ரீதியாக முட்டுக்கட்டை போட்டனர். இதுபோன்ற சங்கடம், காங்கிரசுக்கோ, மற்ற கட்சிகளுக்கோ ஏற்பட்டிருந்தால், பெரியபோராட்டமே வெடித்திருக்கும். நாங்கள் அதை அரசியலாக்க விரும்பவில்லை. ஒருவேளை, மைதானத்துக்கான அனுமதியை ரயில்வேதுறை தராமல் போயிருந்தால், மோடி வந்திருக்கமாட்டார். ஆனால், திருச்சியில் மிகப்பெரிய கண்டன போராட்டத்தை நாங்கள் நடத்தியிருப்போம்.என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...