தீவிரவாதம் என்ற பெயரில் உரிமைகளைமீறி அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது சட்ட அமலாக்கபிரிவினர் நடவடிக்கை எடுத்துவருவதாக குற்றச்சாட்டுகள் மத்திய அரசுக்கு வந்து கொண்டிருக்கின்றன. அதையடுத்து முஸ்லிம் இளைஞர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவேண்டும் என மாநில முதலமைச்சர்களுக்கு உள்துறைமந்திரி சுஷில்குமார் ஷிண்டே சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார்.
அரசியல் ஆதாயம்தேடும் நோக்கில் ஷிண்டே இந்தகடிதத்தை எழுதியுள்ளார் என்று எதிர்கட்சிகள் கூறின. இது குறித்து பாஜகே மூத்த தலைவர் வெங்கையா நாயுடு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நீங்கள் ஒருநாட்டுக்கு உள்துறை மந்திரியாக இருக்கிறீர்களா? அல்லது ஒருசமுதாயத்துக்கு உள்துறைமந்திரியாக இருக்கிறீர்களா?. இது பொறுப்பற்றதாகும். இது இந்திய அரசின் முட்டாள்தனமானசெயலாகும்.
ஷிண்டேயின் இந்த உத்தரவானது அரசியலமைப்பு மற்றும் மதச்சார்பின்மைக்கு எதிரானது. இந்த உத்தரவானது எந்த ஒருஅப்பாவியும் கைது செய்யப்படக் கூடாது என்றுதான் இருந்து இருக்கவேண்டும்.
ஒருசாரரை கருத்தில்கொண்டே இந்த நடவடிக்கையை ஷிண்டே எடுத்திருப்பது வெட்கக்கேடானது. அவரின் இந்தஉத்தரவை குப்பைதொட்டியில் வீசியெறிய பாஜக முதல் மந்திரிகளை நான் கேட்டுக்கொள்கிறேன்.என்று அவர் கூறினார்.
சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ... |
அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது. |
முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ... |
Leave a Reply
You must be logged in to post a comment.