நரேந்திர மோடியை மனிதவெடிகுண்டு மூலம் கொல்ல சதி

 நரேந்திர மோடியை மனிதவெடிகுண்டு மூலம் கொல்ல சதி குஜராத் முதல்வரும் பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடியை மனிதவெடிகுண்டு மூலம் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக ஆந்திரமாநிலம் புத்தூரில் சிக்கிய பிலால்மாலிக் தெரிவித்துள்ளான்.

ஆந்திரமாநிலம் புத்தூரில் சுற்றிவளைக்கப்பட்டு கைதுசெய்யப்பட்ட பன்னா இஸ்மாயில், பிலால்மாலிக் ஆகிய இருவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பிலால்மாலிக்கின் உறவினர் ஜபார் என்பவர் அருகில் உள்ள மற்றொருதெருவில் வசிப்பது தெரியவந்தது. அவரைப்பிடிக்க போலீஸார் சென்றபோது அவர் ஏற்கெனவே தப்பியோடிவிட்டார். இதையடுத்து காவல்துறையினர் அந்த வீட்டை சோதனையிட்டனர்.

அப்போது அந்தவீட்டிலிருந்து நவீன ரக துப்பாக்கி ஒன்றும் லேப்டாப்பேக் வடிவில் இருந்த ஒரு நவீனரக வெடிகுண்டு கைப்பற்றப்பட்டது . இதுகுறித்து பிலால் மாலிக்கிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது பேக் வடிவிலான வெடிகுண்டு மனிதவெடிகுண்டாக பயன்படுத்த கூடியது என்றும் மேலும் ரிமோட் அல்லது செல்போன்மூலம் சில கிமீ. தொலைவில் இருந்து இயக்கக்கூடியது என்றும் தெரிவித்துள்ளான்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள், இந்தகுண்டை எங்கு வைக்க திட்டமிட்டிருந்தனர் என்றகோணத்தில் விசாரித்தனர்.

அப்போது மாலிக் சென்னைவரும் பாஜக வின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் மாநில முதல்வருமான நரேந்திரமோடியை கொலைசெய்ய திட்டமிட்டு அதைத் தயாரித்ததாக தெரிவித்துள்ளான் .தற்போது அந்த வெடிகுண்டின் தொழில் நுட்பம் குறித்து வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வுசெய்து வருகின்றனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...