தெலுங்கானா உருவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர முதல்வர் கிரண்குமார்ரெட்டி தனிக் கட்சி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திராவைபிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்க மத்திய அரசு தீவிரமாக உள்ளது. ஆனால் ஆந்திராவை பிரிக்க எதிர்ப்புதெரிவித்து சீமாந்திராவில் 2 மாதங்களுக்கு மேலாக போராட்டங்கள் நடந்துவருகிறது. தொடர்போராட்டங்கள் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் சேவைகள் முடங்கின.
மின் ஊழியர்கள் தங்கள்போராட்டத்தை வாபஸ்பெற்றதால் ஓரளவு தற்போது நிலைமை சீராக உள்ளது. இந்நிலையில் சீமாந்திராவில் நடக்கும் போராட்டத்தை முதல்வர் கிரண்குமார் ஒடுக்க தவறிவிட்டதாக அவர் மீது காங்கிரஸ் மேலிடம் கடும் அதிருப்தியில் உள்ளது. கிரண்குமார்ரெட்டி போராட்டக்காரர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏனெனில் ஆந்திராவை பிரிக்ககூடாது என்பதில் கிரண்குமார் ரெட்டி தீவிரமாகவும், உறுதியாகவும் உள்ளார். அதற்கான தீர்மானம் சட்ட சபையில் கொண்டு வரப்படும்போது அதனை தோற்கடிக்க வேண்டும் என்றும் திட்டமிட்டுள்ளார்.
இதற்காக காங்கிரஸ் எம்எல்ஏ.க்களின் ஆதரவுகளை திரட்டிவருகிறார். கிரண்குமார் ரெட்டியின் திட்டத்துக்கு காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் ஒத்துழைக்க சம்மதித்துள்ளனர். இதனால் ஆந்திராவில் கிரண்குமார்ரெட்டிக்கு தனி ஆதரவு அணி உருவாகியுள்ளது. காங்கிரஸ் மேலிடம் தெலுங்கானாவை அமைப்பதில் வெற்றிபெற்றால் ஆந்திர காங்கிரசை உடைப்பது என்று அவர்கள் தீர்மானித்துள்ளனர். அதன்பிறகு காங்கிரசில் இருந்து வெளியேறும் எம்எல்ஏ.க்களை கொண்டு புதுக்கட்சிதொடங்க கிரண்குமார் திட்டமிட்டுள்ளார். புதியகட்சிக்கான அறிவிப்பை வரும் டிசம்பர் மாதம் அதிகார பூர்வமாக வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது. |
தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ... |
நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.