90 கோடி மக்களை பிசைக்காரகலாக மாற்றியதிலும் பெருமை

 90 கோடி மக்களை பிசைக்காரகலாக மாற்றியதிலும் பெருமை மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, குஜராத்தின் கடன்சுமை அதிகம். ஆனால், எதற்கெடுத்தாலும், குஜராத்தின் வளர்ச்சியை பாருங்கள் என்று , பா.ஜ.க ,வினர் தம்பட்டம் அடிக்கின்றனர்' என்று காங்கிரஸ் பொதுச்செயலர், திக்குவாய் சிங், 'டுவிட்டர்' வலை தளத்தில் எழுதியிருக்கிறார்.

திக்குவாய் சிங், மகாபாரதம் படித்திருப்பாரா என்று நமக்குதெரியாது. படித்திருந்தால், நாம் சொல்லும் சம்பவத்தை நினைவுகூர்ந்து, தெளிவுபெறட்டும். இல்லையென்றால், இங்கு, தமிழக காங்கிரஸ் கட்சியில், கோலோச்சிக் கொண்டிருக்கும் பெருந்தனக்காரர்கள், அவருக்கு, இதை, இந்தியில் மொழிபெயர்த்துக் கூறி, பித்தம்தெளிய வைக்கட்டும்.

என்னதான் பாண்டவர்கள் ஐவரோடு, ஆறாவதாக கண்ணனும் கூடவே ஒட்டி கொண்டிருந்தாலும், அவர்களில் யாருக்காவது, எதற்காகவாவது, கர்வம் தலைதூக்கினால், அந்தகர்வத்தை, சம்மட்டியால் ஓங்கியடித்து, இயல்புக்கு கொண்டுவருவது, கண்ணனின் வழக்கம்.

 90 கோடி மக்களை பிசைக்காரகலாக மாற்றியதிலும் பெருமை

ராஜசூய யாகம் செய்தவுடன், தர்மருக்கு, மனதில் உலகில் நம்மைவிட உயர்ந்தவர் யாரும் இல்லையென்பதாய், ஒருகர்வம் தலை தூக்கியது. (உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றிய நாள் முதல், காங்கிரசாருக்கும், இதேபோன்ற கர்வம், மனதில் குடியிருந்து வருகிறது.) கர்வம் தோன்றியவுடன், அதைஅடக்குவது, கண்ணனின் வழக்கமல்லவா?

ஒரு நாள், தர்மரிடம், 'வா! ஒரு, 'பார்ட்டி'யை பார்த்துவரலாம்' என்று அழைத்து செல்கிறார். இருவரும் பாதாளலோகம் சென்று, அங்கு, மகாபலி சக்ரவர்த்தியை சந்திக்கின்றனர். தர்மருக்கு, மகாபலியை தெரியாது; மகாபலிக்கும், தர்மரைதெரியாது. கண்ணனும், மகாபலியும், மாட்லாடி கொண்டிருக்க, தர்மர், ஒருபக்கமாய் தேமேயென அமர்ந்திருக்கிறார்.

புறப்படும்நேரம் வந்ததும், கண்ணனிடம் மகாபலி, 'ஆமாம், இவர்யாரென்று சொல்லவில்லையே…' என, கொக்கிபோடுகிறார்.கண்ணனும் திடுக்கிட்டது போல் நடித்து, 'அட… ஆமாம்ல! ஸாரிஸாரி… இவர், மாபெரும் சக்கரவர்த்தி. தர்மர்ன்னுபேரு. ராஜசூய யாகம்லாம் செஞ்சிருக்காரு.

'டெய்லி' 8,000 பிராமின்சுக்கு, 'லஞ்ச்' புரைவைட் பண்ணிட்டுத்தான் சாப்பிடுவார்ன்னா பார்த்துக்கோங்க' என, 'இன்ட்ரோ' கொடுக்கிறார். அதைக் கேட்ட மகாபலி, சட்டென்று முகத்தைத்திருப்பி, 'என்னது… டெய்லி 8,000 பேரை, இவனோடு சோத்துக்காக காக்கவெச்சிருக்குற இவன்லாம் ஒருசக்கரவர்த்தியா? இந்த லட்சணத்துல, இவனுக்கு ராஜசூய யாகம் ஒருகேடா… கண்ணா, இவனை பாத்தாலே, எனக்கு பத்திட்டுவருகிறது. உடனே இங்கேயிருந்து அழைத்துச்செல்…' என்று சொல்ல, அங்கே விழுகிறது, தர்மனின் கர்வத்துக்கு சம்மட்டிஅடி.

நாட்டிலுள்ள மக்கள்தொகை, 120 கோடியில், 90 கோடிபேரை (சரியாக, 75 சதவீதம்)  உணவுபாதுகாப்பு திட்டத்தின் கீழ், உழலவைத்துள்ள காங்கிரசுக்கு, மோடி குறித்தும், குஜராத் மாநிலகடன் குறித்தும் பேச கொஞ்சமாவது யோக்யதை இருக்கிறதா?

அறுபது ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில், 90 கோடிபேரை, அரசின் சோற்றுப்பாதுகாப்பு திட்டத்தின்கீழ் கொண்டு வந்துள்ள, சரித்திரசாதனையை, காங்கிரசைதவிர, வேறு எந்த கட்சியாலும் சாதிக்கமுடியாது; முடியவே முடியாது. இந்த, 'ரிகார்டை' கின்னசுக்கு எழுதிப்போடலாம். உலக வங்கிகளில், இந்தியர்களின் தன்மானத்தை, தலையை அடகுவைத்து, காங்கிரஸ் வாங்கிக் குவித்துள்ள கடன்தொகை எத்தனை லட்சம் என, சொல்வாரா திக்குவாய்சிங்?

இந்த லட்சணத்தில், உணவுபாதுகாப்பு மசோதா ஓட்டெடுப்பின் போது, ஓட்டுப்போட முடியாமல் போனதற்கு, குமுறிகுமுறி அழுதாராம் சோனியா. நல்லா காட்டுறாங்கப்பா!' பிலிமு!!

சுவிஸ் வங்கியில் உறங்கி கொண்டிருக்கும், இந்தியர்களின் கறுப்புப்பணத்தை, அந்த நாடே, 'வித்ட்ரா' பண்ணி கணக்கை முடித்துக்கொடுத்தாலும், அதை, இந்தியாவுக்கு கொண்டுவராமல், வேறு எந்தநாட்டிலாவது முதலீடுசெய்ய முடியுமா என யோசிக்கும் காங்கிரசுக்கு, மோடியையும், பாஜக.,வையும் குறைகூற அருகதை உண்டா? !!

வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கறதுனு, இதை, இதைத்தான் பெரியவங்க சொல்வாங்க.

காங்கிரஸ் கயவர்களை வேரறுப்போம்
பாஜகவை அரியனையில் ஏற்றுவோம்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.