குண்டு வெடிப்பு பிரச்சினையை மோடி கையாண்ட விதம் பாராட்டுக்குரியது

 நேற்றைய பேரணியில் நரேந்திரமோடி, குண்டு வெடிப்பு பிரச்சினையை கையாண்ட விதமும், கடல்போலத் திரண்டு இருந்த மக்கள் கூட்டத்தில், அச்சமும் ஆத்திரமும் ஏற்பட்டு விடக் கூடாது என்று, குண்டு வெடிப்பைப் பற்றிக்குறிப்பிடாமல், பேரணியை நடத்திய முறையும், மிகவும் பாராட்டுக்கு உரியது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது ; மோடி பேசியமேடையில் இருந்து 150 மீட்டர் தொலைவில் ஒருகுண்டு, முன்னதாக வெடித்து இருக்கிறது. அவர் மேடையைவிட்டு இறங்கி சென்றதற்கு பின்னர், 80 அடி தொலைவில் ஒருகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு, செயல் இழக்க செய்யப்பட்டு உள்ளது.

குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கவைப்பதற்கான குண்டுகள் பயன் படுத்தப்பட்டுள்ளன. பேரணியில் கலவரம் ஏற்படட்டும்; நரேந்திரமோடி பேசாமல் போகட்டும்; அல்லது, உயிர்ப்பலி ஆனாலும் பரவாயில்லை என்ற கொடியநோக்கத்தை தவிர, வேறுகாரணம் எதுவும் இருக்கமுடியாது. நினைப்பதற்கே இதயம் நடுங்குகிறது. பேரணியை இரத்துச் செய்தால், மக்களிடம் பீதியும், ஆத்திரமும், அதனால் பெரும்கலவரமும் ஏற்படக்கூடும் என்று கருதி, உயிர் ஆபத்தைப் பற்றி பொருட்படுத்தாமல் பேரணியில் பங்கு ஏற்பது என, நரேந்திரமோடி முடிவு செய்து இருக்கிறார்.

பிரமாண்டமான பேரணியில் அவரும், ராஜ்நாத்சிங், அருண்ஜெட்லி உள்ளிட்ட முன்னணித் தலைவர்களும், மேடையில் ஏறிப் பேசினார்கள். ஆனால், அவர்கள் எவரும் குண்டுவெடிப்பு சம்பவத்தை குறிப்பிட்டோ, யாரையும் குற்றம்சாட்டியோ எதுவுமே பேசாதது, பாராட்டத்தக்க பொறுப்பு உணர்ச்சியை காட்டுகிறது

நேற்றைய பேரணியில் நரேந்திரமோடி, இப்பிரச்சினையைக் கையாண்ட விதமும், கடல் போலத்திரண்டு இருந்த மக்கள் கூட்டத்தில், அச்சமும் ஆத்திரமும் ஏற்பட்டு விடக்கூடாது என்று, குண்டு வெடிப்பைப் பற்றி குறிப்பிடாமல், பேரணியை நடத்தியமுறையும், மிகவும் பாராட்டுக்கு உரியதாகும். இல்லையேல், வட இந்தியா நாம் கற்பனை செய்யமுடியாத மிகப்பெரிய இரத்தக்களறியைச் சந்தித்து இருக்கும். தற்போது கைதுசெய்யப்பட்டு இருப்பவர்கள், விசாரணையில் தந்த ஒப்புதல் வாக்குமூலத்தில் நரேந்திரமோடியின் உயிருக்கு உலைவைக்கும் நோக்கம் இருந்தது என்பது தெரியவந்து உள்ளது. பலத்த அதிர்ச்சியைத் தந்த இந்த குண்டு வெடிப்புகள் நிகழ்ந்த பின்னரும், மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே, ஒரு இசைநிகழ்ச்சியில் கலந்துகொண்டது கண்டனத்துக்கு உரியதாகும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...