பீகார்மாநில முதல்வர் நிதீஸ் குமார் அகந்தைகொண்ட முதல்வர் என்று நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசினார்.
அப்போது அவர் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை கடுமையாக சாடினார். பழங்குடியின மக்களின் வளர்ச்சியில் காங்கிரஸ் அக்கறை காட்ட வில்லை. நாடு சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆகியும், சத்தீஸ்கர் மலை வாழ் மக்கள் எந்த முன்னேற்றத்தையும் பெறவில்லை. பா.ஜ.க.,வினால் மட்டுமே இந்தமாநில மக்களை முன்னேற்ற முடியும். அகந்தைகொண்டவர் நிதிஷ் குமார்:
ராமன் சிங் தலைமையில் சத்தீஸ்கர் மாநிலம் நல்லவளர்ச்சியை பெற்றுள்ளது. ஆனால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் வளர்ச்சியில்லை. பாட்னாவில் குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட மக்களை டாக்டர் ராமன் சிங் (சத்தீஷ்கர் முதல்வர்) சந்தித்தார். அரசின் குறைபாடுகள்பற்றி விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டது. குண்டுவெடிப்பு பற்றி பீகார் முதல்வர் நிதிஷ் குமாரிடம் கேட்டபோது அவரது அகந்தைவெளிப்பட்டது. இதன் மூலம் பரிதாபம்காட்டும் முதல்வர் எப்படி நடந்துகொள்கிறார் என்பதையும், அகந்தையுள்ள முதல்வர் எப்படிநடந்து கொள்கிறார் என்பதையும் பார்க்கமுடிகிறது என்று மோடி பேசினார்.
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.